பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் பயிலும்போது என் பழக்கங்கள் 301 கழக தேர்வுத்தாள்களாயிருப்பினும்) பேராசிரியர் சீநிவாசன் வகுப்பில் செய்து காட்டுவார். இவவாறு காட்டும்பொழுது சிந்தித்தற்குரிய துண்டுக் குறிப்புகளைக் (clues) காட்டிக் கொடுப்பார். கோண கணிதத்தில் மிக அற்புதமான கணக்குகளை எல்லாம் செய்து காட்டுவார். இக்கணக்கு களைச் செய்யும்போது இக்காலச் சிறுகதைகளைப் (Short Stories) படிப்பது போன்ற உற்சாகம் இருக்கும். நான் இரண்டாம் ஆண்டு இடைநிலை வகுப்பிலிருந்த போது சவுக்குப் பகுதியிலுள்ள காசியப்பா ராவுத்தர் ஸ்டோரின்மேல் மாடி அறையில்தான் தங்கியிருந்தேன். விடுமுறை நாட்களில் சிறிது நேரம்கூட வீணடிக்கமாட்டேன். அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, காலை ஒன்பதுமணிவரை ஆங்கிலம், தமிழ் படிப்பேன். விடுமுறை நாட்களில் காலை ஒன்பதரை மணிக்கு ஆதிகுடி வேங்கட்டராம அய்யர் உணவு விடுதிக்குச் சென்று பத்தரை மணிக்குத் திரும்பி விடுவேன். வரும்போது மலைவாழைப்பழம் (சிறியது) ஒரு டஜன் வாங்கி வருவேன். எப்பொழுதும் அறையில் பத்துப் பழத்திற்குக்கு குறையாது வைத்திருப்பேன். அதிகாலையில் எழுந்து படிக்கும்போது பசி எடுக்கும். வாழைப் பழங்களை உண்டு மண்கூசா நீரைப் பருகிப் பசியைத் தணித்துக் கொள்வேன். காலையில் காஃபி பானம் அருந்துவதில்லை. உணவு கொண்டு திரும்பியதும் சோர்வு இருக்கும். ஒருமணி அல்லது இரண்டு மணி உறங்குவேன்; 12 மணி சுமாருக்கு எழுந்ததும் இயற்பியல்; வேதியியல் கணக்குகள் இருந்தால் அவற்றைச் செய்து கோப்புகளில் உரிய இடத்தில் கோத்து வைப்பேன். பெரும்பாலும் கணிதப் பாடக் கணக்குகளைச் செய் வதில்தான் அதிகக் காலம் செலவாகும். அந்தக் காலத்தில் காசியப்பா ராவுத்தர் ஸ்டோரிலுள்ள சுமார் 20 அறைகளில் பாதிக்குமேல் காலியாக இருக்கும்.