பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 நினைவுக் குமிழிகள்-1 அறையில் மின் விளக்குகள் இல்லை. அரிக்கேன் விளக்கைக் கொண்டுதான் காலந்தள்ளினேன். குரங்கு மார்க் மண் ணெண்ணெய் டின் ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும். இறைக்கும் சாதனம், புனல், கண்ணாடிப் போத்தல் இவை தயாரில் இருக்கும். எண்ணெய்க்காக அடிக்கடி வெளியில் செல்லும் நேரம் குறைந்தது. இரண்டாண்டுகளிலும் ஓயாது உழைத் தேன் படக்காட்சிகளை எப்பொழுதாவது காண்பேன்; அடிக்கடி போகும் பழக்கம் இல்லை. இரண்டாம் ஆண்டு பயிலும்போது அரங்கசாமியின் பி. ஏ. படிப்பு முடிந்தது அக்காலத்தில் தேர்வுக்குப் போகுமுன் வடிகட்டும் பழக்கம் (Selection) இருந்தது. சரியாகப் படிக்காதவர்களை மார்ச்சுத் தேர்வுக்குப் போகாமல் கல்லூரி தடை செய்யும். இவ்வாறு படைசெய்யப் பெற்றவர் செப்டம்பர் தேர்வுக்குப் போகலாம் பி.ஏ. தேர்வாக இருந்தால் ஆங்கிலம், தமிழ், விருப்ப தாடங்கள் என்ற பகுதிகளில் தனித்தனியாக வடிகட்டும் முறை இருந்தது. அரங்கசாமி பி. ஏ. ஆங்கிலத்தில் தடை செய்யப் பழக்கம் பெற்றார். இந்த மூன்றுமாத காலத்தில் நான் தங்கியிருந்த ஸ்டோருக்கு வராமல் தெப்பக்குளத்துக் கருகிலுள்ள முதலியார் விடுதியில் தங்கியிருந்தார். ஒரு நிகழ்ச்சியில் அவர் என் அருகில் இல்லாதது எனக்குக் கை முறிந்தது போன்றிருந்தது. பணக்கஷடம் அதிகமிருந்ததால் இரண்டாவது ஆண்டு காசியப்பா ராவுத்தர் ஸ்டோரில் ரூபாய் மூன்று வாடகை யுள்ள அறையில் தங்கியிருந்தேன்; சற்றுச் சிறிய அறைதான். ஒரு கட்டில், ஒரு மேசை, ஒரு ஸ்டுல்தான் போட முடியும். இப்படியும் அப்படியும் சாமான்களை நகர்த்துவதற்குக் கூட இடம் இருக்காது. இத்தகைய அறை ஒன்றுதான் அங்கிருந்தது; இது கீழ்புற வரிசையில் இருந்தது. சென்ற ஆண்டு மேல் புறவரிசையில் அரங்கசாமி அறைக்கு அருகி லுள்ள அறையில் தங்கியிருந்தேன். இரண்டாம் ஆண்டு