பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சல்லூரியில் பயிலும்போது என் பழக்கங்கள் 303 நான் தங்கியிருந்த அறையுள்ள வரிசையில் நான்கு காலியறை களுக்கப்பாலுள்ள ஓர் அறையில் இரண்டு பேர் தங்கியிருந் தனர். அதில் ஒருவர் (பெயர் நினைவு இல்லை) ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவர்; 'பொறியியல் டிப்லமோ" படித்தவர். அவர் மைத்துனர் தேசியக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயிலுபவர். ஒருநாள் நான் செய்து வைத்திருக்கும் கணிதக் குறிப்பேடுகளைப் பார்ப்பதற்காக இருவரும் வாங்கினார்கள். நானும் பத்து நாட்கள் அவற்றைத் திருப்பித் தருமாறு கேட்கவில்லை. பிறகு மிகச் சிரமப்பட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் தங்கியிருந்த மூன்று ரூபாய் அறையில் முன்பக்கம் சாளரம் இல்லை; பின்பக்கம்தான் இருந்தது. விடுமுறை நாட்களில் பகலில் உறங்கும்போதும், கணக்குகளைச் செய்யும்போதும் அறையின் கதவுகளை மூடித் தாளிட் டிருப்பேன் அமைதி கலையக் கூடாதென்பதற்காக இந்த ஏற்பாடு. மேற்குறிப்பிட்ட இருவரும் சிறு சுருட்டு புகைப் பவர்கள். பாட்டுப் பாடி ஒலி எழுப்பிக் கலாட்டா செய் பவர்கள். நான் உழைப்பவனாதலால் பிறரிடம் அதிகம் பழகுவதில்லை. அக்காலத்தில் அதிகம் பழகினால் கை மாற்றுக் கேட்பார்கள்; திருப்பித் தரவும் மாட்டார்கள். அடிக்கடி அறைக்கு வந்து அரட்டை அடிப்பார்கள். இவற்றைத் தவிர்ப்பதற்காகவே பிறரிடம் அதிகம் பழகு வதில்லை. அதுவும் அஞ்சல் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது தெரிந்தால் கைமாற்றுத் தொல்லைகள் மிகுதியாக இருக்கும். ஆண்டு செலவுக்குரிய ரூ. 500/= கணக்கில் இருக்கும், நான் அறையை எப்பொழுதும் மூடிக் கொண்டே இருப்பது அவர்கட்குப் பிடிக்கவில்லை. போகும் போதும் வரும்போதும் கதவுகளைத் தட்டிவிட்டுச் செல்வார் கள். கதவுகளில் எச்சில் துப்பிவிட்டுச் செல்வார்கள். சளியை அப்பிக் கதவுகளைத் தூய்மையற்றனவாகச் செய்து விடுவார்கள்.