பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பெரகம்பியில் - திண்ணைப் பள்ளி வாழ்வில் குமிழி-1 1. நான் பிறந்த சிற்றுார் திருச்சி மாவட்டத்தில் இலால்குடி வட்டத்தில் பெரகம்பி என்பது ஒரு சிற்றுார். என் அன்னையார் பிறந்த ஊர். நீர் வளமும், நில வளமும் மிக்க அழகியதோர் ஊர். ஊருக்கு மேற்கே ஓர் ஏரி உண்டு. அதில் நீர் நிரம்பாத ஆண்டை அக்காலத்தில் நான் பார்த்ததில்லை. அந்த ஏரி நீர் பாய்தலால் ஊருக்கு மேற்புறத்திலுள்ள நஞ்செய் நிலத்தில் இருபோகமும் நன்றாக விளைந்தன என்று சொல்ல வேண்டும். ஏரியின் நீர் மேட்டு நிலப் பகுதிக்கும் பள்ள நிலப் பகுதிக்குமாக மதகு வழியாகப் பிரிந்து சென்றது. இந்த ஏரிக்கும் ஊருக்கும் இடையே சற்றேறக்குறைய 50 ஏக்கர் பரப்புக்குரிய பத்தடி பள்ளம் உண்டு. இப்பகுதியில் ஒரு மாரியம்மன் கோயில் உண்டு. தவிர, தனியாரின் வைக்கோல் போர் பட்டடைகளும் உள்ளன. சில சமயம் ஏரி அளவுக்கு மேல் பெருகி நீர் கடைவழிந்தால் ஊருக்கும் ஏரிக்கும் இடையேயுள்ள பள்ளப் பகுதியில் நீர் சூழ்ந்து விடும். ஒன்றிரண்டு நாட்கள் மக்களைத் தம் வயல்கட்குப்