பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி - 37 37. அறைவாழ்வில் சில பழக்கங்கள் Liண நெருக்கடியால் என் கல்லூரி வாழ்க்கை மிக்க கஷ்ட நிலையில் சென்றது. விடுமுறையில் ஏதாவது சொத்துக்களை ஒன்றுக்குப் பாதிக்கும் குறைவாக விற்று ரு 500/= சரிசெய்து கொள்வேன். பணத்தை பிறர் அறியாமல் அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்துக் கொள்வேன். ஒவ்வொரு மாதம் முதல் நாள் அன்று உணவுக்கு, அறை வாடகைக்கு, சிற்றுண்டிக்கு, சில்லறைச் செலவுகளுக்கு எனக் கணக்கிட்டு ரூ 30 = கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வேன். இத்தொகையைக் கொண்டு அந்த மாதத்தைத் தள்ளவேண்டும். இப்படி மிகச் சிக்கனமாக வாழ வேண்டிய நிலை ஏற்படலாயிற்று. காசியப்பா ராவுத்தர் ஸ்டோரில் வாழ்ந்தபோது ஆதிகுடி வேங்கடராம அய்யர் உணவு விடுதியில் (மேல் புல்வார்டு சாலையில் இருந்தது) உணவுக்காகச் செல்வேன். மாலையில் 6 மணிக்கே சென்று அந்தச் சாலையிலுள்ள வாசகசாலையில் நாளிதழ்களைப் புரட்டுவேன். காரைக்குடியி லிருந்து வெளிவந்த குமரன், விடுதலை (குறிப்பாக குத்துசி குருசாமியின் கட்டுரைகள்) சுதேசமித்திரன், குடியரசு போன்றவற்றில் அரைமணிநேரமும்; இந்து, மெயில் என்ற ஆங்கில நாளிதழ்களில் அரைமணி நேரமும் செலவிடுவேன். ஒன்றரையாண்டுக் காலம் இவ்வாறு கழிந்தது. விடுமுறை நாட்களில் காலை 9.30 மணிக்குப் பகலுணவு கொள்ளச் செல்லும்போது அதே சாலையிலுள்ள மாவட்ட நூலகத்தில் சில நூல்களில் ஆழங்கால்படுவேன். திரு வி.க. எழுதிய "பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை', 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, ‘தமிழ்த் தென்றல் என்ற நூல்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. இவற்றால் அப் —20—