பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 நினைவுக் குமிழிகள்-1 பெருமானிடம் ஈடுபாடும் பக்தியும் வளர்த்துக் கொள்ள வழியாக இந்நூல்கள் அமைந்தன. மறைமலையடிகள் எழுதிய முற்காலப் புலவர்களும் பிற்காலப் புலவர்களும்' "சிந்தனைக் கட்டுரைகள்', 'பண்டைக் காலத் தமிழரும் ஆசிரியரும்', ' குமுதவல்லி நாகநாட்டரசி', 'கோகிலாம்பாள் கடிதங்கள்’, ‘அறிவுக் கொத்து போன்ற நூல்களில் ஆழங் கால்படுவேன். உ.வே.சாமிநாத அய்யரின் நான் கண்டதும் கேட்டதும்', 'பழையதும் புதியதும்’, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சரித்திரம் ஆகிய நூல்களில் என் உள்ளம் மேய்ந்தது. இந்த நூல்களையெல்லாம் புதன், ஞாயிறு விடுமுறை நாட்களில் பகல் 10-12 மணிவரை படித்தே முடித்தேன். பேராசிரியர் ரா.பி சேதுப்பிள்ளையின் "பன்னிரு கட்டுரைகள்', 'வீரமாநகர் போன்ற உரைநடை நூல்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. நூலகங்கள் திருக்கோயில்கள் போன்றவை. கல்வெட்டு களில் இவை சரசுவதி பண்டாரம்’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளன. இவை கடந்தகால முனிவர்களின் கருத்துகள் நிரந்தரமாக வாழும் இடங்களாகும்; பண்டைக்காலப் பெரியோர்கள் கல்லறையில் அடங்கிக் கிடந்தாலும், தீயில் சாம்பலாகப் போனாலும், அவர்கள் நூல்களில் அடங்கிக் கிடந்து நம்மிடம் பேசுகின்றனர்; நமக்கு அறவுரைகள் தந்த வண்ணமுள்ளனர்; இந்த அறவுரைகள் அவர்தம் வாழ்க்கையி னின்றும் மலர்ந்தவை. இதனால்தான் "நூல்கள் கூடுவிட்டுக் கூடு பாய்தல் செயல்களை நிறைவேற்றுகின்றன. இவை இறவாமையின் குறியீடுகள்: சாவாமையின் அறிகுறிகள். மாண்டவர்கள்-மறைந்தவர்கள் சிதறிப் போயினர்; அவர் களை நாம் கண்டறிய முடியாது; ஆனால்; அவர்கள் நூல் களில் வாழ்கின்றனர்' என்று ஆங்கில அறிஞர் ஒருவர் கூறியுள்ளதை இந்த நூலகப் படிப்பில் பார்க்க முடிகின்றது.