பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறைவாழ்வில் சில பழக்கங்கள் 30? நூலகங்கள் இலக்கியத்தின் பேழைகள். நாம் நல்ல நூல் களின் மூலம் மனத்திற்கேற்ற அணிகலன்களைப் பெறலாம். இங்கு நம் விடுப்பூக்கத்திற்கேற்ற விருந்துண்ணலாம்; வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக உள் ள வ ற் ைற யு ம் கண்டறியலாம். நூலகத்திலுள்ள பன்னூல்களைப் புரட்டும் போது இந்த நான்கு சுவர்களின் எல்லைக்குள் எழில் கொழிக்கும் காஷ்மீரத்தைக் காண்கின்றோம். கண்ணன் கன்று காலிகளை மேய்த்துக் வேய்ங்குழலூதி வேடிக்கையாகப் பொழுது போக்கின பிருந்தாவனத்தைக் காண முடிகின்றது. மைசூருக்கருகிலுள்ள இக்கால பிருந்தாவனமும் நம் கண்ணில் படுகின்றது. பண்டைய உலகின் இடிபாடுகளையும் மிகு புகழ் கொண்ட இன்றைய உலகின் பல பகுதிகளையும் பார்க்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன. சுருங்கச் சொன்னால் பண்டைய நாகரிகத்தையும் இன்றைய நாகரிகத்தையும் ஓரிடத்தில் ஒருங்கே காண முடிகின்றது. இவையெல்லாம் நூலகப் படிப்பில் நாம் பெறும் அறிவுச் செல்வமாகும். காசியப்ப ராவுத்தர் ஸ்டோர் வாழ்க்கையில் அருகிலிருந்த நகர்மன்ற (Town Hall) மைதானத்தில் சில பொதுக் கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். அக்காலத்தில் பேச்சினால் என் மனத்தைக் கவர்ந்தவர்கள் கி.ஆ.பெ. விசுவநாதன், தந்தை பெரியார், ஈ.வெ.ரா. பட்டுக் கோட்டை அழகிரிசாமி, வல்லத்தரசு, ப. ஜீவானந்தம், நீலாவதி இராமசுப்பிரமணியம் ஆகியோர். ஒருமுறை குளித்தலையில் (நான் பள்ளியிறுதி வகுப்பில் இருந்த காலத்தில்) திரு.வி.க. பேச்சைக் கேட்டதுண்டு. (1934) தேசியக் கல்லூரியில் பேராசிரியர் சாரநாதன் முதல்வராக இருந்த காலத்தில் நீலாவதி அம்மையாரும் ஜீவானந்தமும் பேசிய புரட்சிகரமான இலக்கிய உரைகள் இன்னும் என் மனத்தில் ஒலிக்கின்றன. அக்காலத்தில் மிக்க புகழுடன் விளங்கிய மறைமலை அடிகள், ஞானியார் சுவாமிகள் இவ tř