பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 நினைவுக் குமிழிகள்-1 களைப் பார்க்கவும் பேச்சுகளைச் செவிமடுக்கவும் நான் நற்பேறு பெறவில்லை. சிற்றுாரில் பிறந்து வளர்ந்து திருச்சி வரை எட்டிய எனக்கு எத்தனையோ வாய்ப்புகள் இல்லா தொழிந்தன. திருச்சி மலைக்கோட்டையில் யானைக் கட்டித் தெருவில் கீழ்க்கோடியில் உள்ள சைவசித்தாந்த மகாசபையின் ஆதரவில் அடிக்கடி நிகழும் இலக்கியக் கூட்டங்களுக்குப் போவதுண்டு. இங்குப் பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியாரின் பெரிய புராண விளக்க உரைகள் என் மனத்தைக் கவர்ந்தன. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இக்கூட்டத்தில் செவியமுதம் பருகுவதுண்டு. என் ஆசிரியப் பெருந்தகை பேராசிரியர் நடேச முதலியார் அவர்கள் பிஷப் ஹீபர் கல்லூரிக் கட்டடத்தில் (தெப்பகுளத்திற்கருகி லுள்ளது) அடிக்கடிக் கூட்டும் சிறப்புச் சொற்பொழிவுகளைச் செவிமடுப்பதுண்டு. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் இவர்களின் பேருரை களைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். ஆனால் இவர்களின் புலமை என்னை மிகவும் கவர்ந்தது. இந்த அநுபவம் எல்லாம் அறிவியலில் அதிக நாட்டம் கொண்டு பயின்ற என்னை பிற்காலத்தில் தமிழுக்கு ஈர்க்கும் விசைகளாகப் பயன் பட்டனபோலும் என்று என் மனம் நீள நினைந்து அசை போடுகின்றது. உள்மனத்திலும் ஆ ழ் ம ன த் தி லு ம் நடைபெறும் போராட்டங்களை ஃபிராய்டு, யுங் போன்ற உளவியல் வல்லுநர்களே அளந்தறிய முடியும். மலபார் விடுதிக்கு மாறிய பிறகு எவராலும் எவ்விதத் தொந்தரவும் இல்லை. உணவுக்காக தொலைதுாரம் நடக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. பொங்கல் திருநாளுக்குப் பிறகு தேர்வுக்காகப் பாடங்களைத் திருப்பும் பழக்கத்தை மேற்கொள்வேன். அப்படித் தொடங்கினால்