பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறைவாழ்வில் சில பழக்கங்கள் 309 தான் ஆங்கிலம், தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை ஒர் ஐந்து முறையாவது திருப்பிப் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கும். அதிகாலையில் 4.30 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு காலை நேரங்களில் ஆங்கிலம், தமிழ்ப் பாடங்களைத் திருப்புவேன். மாலையில் உணவு கொள்ளும் நேரம் தவிர இயற்பியல், வேதியியல் பாடங்களைத் திருப்புவேன். கணிதத்தில் ஏராளமான கணக்குகளைப் போட்டிருந்ததால் அவற்றையெல்லாம் திருப்புவதற்கு அதிகக் காலம் வேண்டியிருந்தது. இதனை மாலை நேரங்களில் வைத்துக் கொள்வேன். காவிரிக்கரையில் இருப்புப்பாதைப் பாலத்திற்கருகில் சாய்வான கல்-கட்டால் கட்டப் பெற்றுள்ள அமைதியான இடம் ஒன்று உண்டு. பொங்கலுக்குப் பிறகு காவிரியிலும் வெள்ளப் பெருக்கு குறைந்து தெளிவான நீர் தென்பகுதி யிலும் ஓடிக்கொண்டிருக்கும். மாலைக் கதிரவன் ஒளி அமைதியான அந்தக் கரைப்பகுதியில் வீசும். இந்தப் பகுதியில் தெளித்த நீரோட்டமும், எதிர்க் கரையில் உள்ள அழகிய தோப்புகளும், இடைஇடையே பாலத்தில் இரயில் வண்டி ஒடும் காட்சியும் சூழ்நிலையின் அழகைப் பன்மடங்கு பெருக்கும். பாஞ்சாலி சபதத்தில் பார்த்தன் பாஞ்சாலிக்குப் பரிதி எழிலைக் காட்டுவனவாக அமைந்த பாரதியின் பாடல்கள் நினைவுக்கு வரும். பார்த்தன் பேசுகின்றான். பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம் பண்மொழி கணந்தோறும் மாறி மாறி ஒரடிமற் றோரடியோ டொத்த லின்றி உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்! சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ் செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.