பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 நினைவுக் குமிழிகள்-1 கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் கணந்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே கணந்தோறும் ஒரு புதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்தி அவள் களிக்கும் கோலம் கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். அடிவானத் தே அங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய். இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி! எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே மொய்குழலாய் சுற்றுவதன் மொய்ம்பு காணாய் வடிவான தொன்றாகத் தகடி ரண்டு வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்! பார்த்தன் பாஞ்சாலிக்குக் காட்டின காட்சி இயற்கையன்னை எனக்குக் காட்டுவது போலிருக்கும். இந்த இடத்தில் அமர்ந்து கொண்டே கைபுனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பையும் கைபுனைந்தியற்றிய கவின்பெறு வனப்பை யும் கண்டு களிக்கலாம். இந்தச் சூழ்நிலையில் மனம் விரிந்து காணப்படும். துணிப்பையில் கொண்டுவந்திருக்கும் கணிதத் குறிப்பேடுகளைப் புரட்டிச் செய்த கணக்குகளையெல்லாம் மறுபார்வையிட்டு வழிகளையும் முறைகளையும் மனத்தில் இருத்துவேன். இந்தச் சூழ்நிலையில் கணிதப்பாடம் மனத்திற்கு அற்றுபடியாகிவிடும். கணக்குப்பாடம் முடிந்த பிறகு இயற்பியல், வேதியியல் பாடங்களை நான் சேமித்து 7. பாஞ்சாலி சபதம்-(148-1:0)