பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 நினைவுக் குமிழிகள்-1 யிருந்த இடத்தை விசாரித்துக் கொண்டு என்னைச் சந்தித்தார். பொட்டணத்தில் இராமசாமி ரெட்டியாரின் செல்வ நிலையின் விவரங்களை யான் அறியாவிடினும், அவர் பெரும் பணக்காரர் என்பதை நான் செவிவழிச் செய்தியாக அறிந்திருந்தேன் என் அன்னையார் இவர் குடும்பத்தைப். பற்றிச் சொன்னதும் ஒரு கதைபோல் நினைவிலிருந்த து இராமசாமி ரெட்டியாருக்கும் அவர்தம் சிறிய பாட்டியாரின் மகன் வயிற்றுப் பேரனாகிய என் குடும்ப நிலை பற்றி ஒரளவு நன்றாகவே அறிந்திருக்க முடியும். அதாவது எனது ஏழ்மை நிலையை அவர் ஒரளவு நன்றாகவே அறிந்திருப்பார். கல்லூரியில் படிக்கும் எனக்குச் சொத்து முதலியவை பற்றி ஒன்றும் தெரியாது என்பது உண்மையே. ஆனால் நாட்டுப் புறத்தில் வேறு வேலையின்றிச் செல்வச் செழிப்பில் திளைப் பவர்கட்குத் தம் நிலையும் நன்கு தெரியும்; பிறரது செல்வ நிலையையும் நன்கு அறிந்திருப்பர். அவர் என்னை நோக்கி வந்தது நான் படித்தவன், நன்றாகப் படிப்பவன், ஒழுக்க நிலை கெடாதவன் என்பதற்காகத்தான் என்பதை நன்கு அறிவேன். இராமசாமி ரெட்டியாருடன் வந்த இராமச்சந்திர ஆச்சாரிதான் இந்த நிகழ்ச்சியில் வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசினார்: இராமசாமிரெட்டியார் இடைஇடையே பேசுவார். நான் சொன்னேன்: ‘'எனக்கு இன்னும் இரண்டாண்டுப் படிப்பு இருக்கின்றது. என்னுடைய பொருளாதார நெருக்கடியால் அப்படிப்பை எப்படி முற்று விப்பது? என்பதை நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். திருமணம் என் படிப்புக்குக் குந்தகமாகிவிட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் இப்போதே தோன்றத் தொடங்கி விட்டது. திருமணம் என்றால் செலவு வரும். அதை எப்படிச் சமாளிப்பது? என் பட்டப் படிப்புக்கு மட்டிலும் குறைந்தது ரூ 1000/= வேண்டும். இதை எப்படிச் சரிக்