பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் திருமண ஆண்டு நிகழ்ச்சிகள் 313 கட்டுவது? என்ற யோசனையில் ஆழ்ந்து கிடக்கின்றேன். வறியவன் இளமைபோல் வாடிய சினைய வாய்க் (கலி. 10) கிடக்கின்றேன். தவிர, இருபது வயதிலேயே சிற்றின்பத்தில் இறங்குவதும் சரியன்று. கல்வியில் நாட்டம் இல்லாது சிற்றுாரில் உள்ள செல்வக் குமாரர்கட்கு இவ்வயதில் திருமணம் சரியாக இருக்கலாம். உயர்கல்வியில் நாட்டம் உள்ள எனக்குத் திருமணம் தகுமா? என்பது யோசித்து முடிவு எடுக்க வேண்டியதொன்று' என்றேன். இராமச்சந்திர ஆச்சாரி சொன்னார்: "திருமணம் படிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவர்கட்கு இடையூறாக இராது. யோசியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். இது தவறான முடிவு ஆகாது’ என்று. நான் சொன்னேன். வறுமையால் வாடுகின்றவனுக்கு, மேலே படிப்பதற்குப் பொருளைப்பற்றி யோசித்துக் கொண்டிருப்பவனுக்கு, திருமணத்திற்குப் பொருள் தேடச் சொல்லுகின்றீர்கள். தவிர, ரூ 1000/- இருந்தால்போதும் என்கின்றீர்கள். சேர்ந்தாற்போல் இத்தொகைக்கு எப்படி வழி செய்வது?’ என்று. இராமசாமி செட்டியார் சொன்னார்: "எப்படியாவது ரூ. 1000/-க்கு வழி செய்து கொள்க. நான் ரூ. 3000/வாங்கியிருப்பதாக என் பாட்டியிடம் சொல்லி விடுகின்றேன். என் பெற்றோர்களிடமும் அப்படியே தெரிவித்து விடு கின்றேன். படிப்பைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதற்காகும் செலவை நான் பார்த்துக் கொள்கின்றேன். எங்களோடு ஒட்டிக் கொண்ட பிறகு இஃது எளிதான செயலாகி விடும்' என்று. இராமச்சந்திர ஆச்சாரியும் இதற்கு ஒத்து ஊதினார்; நான் ஒருவாறு ஒப்புதல் கொடுத்தேன். தேர்வு முடிந்து ஊருக்குச் சென்று என் அன்னையார் அநுமதியுடன் உறுதி