பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 நினைவுக் குமிழிகள்-1 யளிப்பதாகச் சொல்லி அவர்கட்கு விடை கொடுத்தனுப்பி விட்டேன். தேர்வுகள் முடிந்தன; ஊர் திரும்பினேன். என் அன்னையாரிடம் இச்செய்தியை அறிவித்தேன். அவர்கள் சோதிடர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்; குருபலன்' இருந்தால் செயலில் இறங்கலாம் என்றார்கள். இஃது ஒரு விதத்தில் பச்சைக்கொடி காட்டியது போல் இருந்தது. என் அன்னையாருக்குப் பிடித்த மூன்று சோதிடர்கள்: (1) வள்ளுவப் பண்டாரம்; (2) வேலூர் வாத்தியார்; (3) அங்கமுத்து ஆச்சாரி. இவர்கள் மூவரும் தனித்தனியாக என் பிறந்த நாள் குறிப்பை ஆய்ந்து குருபலன் உண்டு; திருமணம் நடைபெறும்’ என்று ஒரே மனத்துடன் சொல்லி விட்டனர்; பெண்ணும் மேல் திசையில் சொந்தத்தில் இருப்ப தாகவும் கூறினர். இவர்கள் ஒருமித்துக் கூறிய கருத்து என் அன்னையாருக்கு உற்சாகம் அளித்தது. திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பொட்டணத்திலிருந்து யாதொரு தகவலும் வரவில்லை. அங்குப் பெண்ணின் தாயார், தந்தையார், பாட்டியார் மூவர் ஒப்புதல் பெற வேண்டும். பெண்ணின் தமையனார் இதில் முக்கிய பங்கு ஏற்றாலும் அவர்கள் ஒருமித்து ஒப்புதல் தருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆயிற்று. என்னால் காத்துக்கொண்டிருக்க முடியவில்லை. வழக்கப்படி ஜூன் திங்களில் கல்லூரியில் அறிவியல் இளங்கலைப்பட்டப் படிப்பில் சேர்வதென்று முடிவு செய்து விண்ணப்பமும் அனுப்பிவிட்டேன். வேதியியலை முதன்மைப் பாடமாகவும் இயற்பியல், கணிதம் இவற்றைத் துணைப் பாடங்களாகவும் படிப்பதென முடிவு கொண்டு விண்ணப்பத்தில் குறித்து அனுப்பிவிட்டேன். கல்லூரியில் சேரும்போது கட்டணங்களாகச் செலுத்து வதற்கும், பாட நூல்கள் வாங்குவதற்கும் ரூ 150/- வரை தேவைப்படும் தொகைக்கும் எப்படியோ வழி செய்து