பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் திருமண ஆண்டு நிகழ்ச்சிகள் 315 கொண்டேன். ரு 28/-க்கு ஒரு மிதிவண்டி வாங்கினேன். அரிசி கொடுத்துவிட்டு கீழச் சிந்தாமணியிலுள்ள நீராகார மடத்தில் உண்பதாக ஒரு மூட்டை (60 படி) நல்ல அரிசியைத் தந்தேன். ஊரிலிருந்து இரட்டை மாட்டு வண்டியிலேயே என் தாயாருடன் அரிசி, எனக்கு வேண்டிய பெட்டி படுக்கை இவற்றுடன் வந்து சேர்ந்தேன். மடத்தில் தங்குவதற்கும் படிப்பதற்கும் சரியான அறை வசதி இல்லை. மேட்டுச் சிந்தாமணியில் ரூ 3/- மாத வாடகையில் ஒர் அறை அமர்த்திக் கொண்டு அதில் தங்கினேன்; அறைக்கு மின் விளக்கு இல்லை; மண்ணெண்ணெய் விளக்குதான் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. நாள்தோறும் மாலையில் கண்ணாடியைத் துடைத்து விளக்கேற்ற வேண்டிய வேலை இருக்கும். காலையில் மேட்டுச் சிந்தாமணியிலிருந்து மிதி வண்டியில் கீழச் சிந்தாமணியிலுள்ள நீராகார மடத்தில் வந்து உணவு கொள்ளல், கல்லூரி செல்லல், பிறகு நண்பகலில் உணவுக்கு வருதல், மீண்டும் கல்லூரி திரும்புதல் என்று கடமைகளைத் திட்டமிட்டுக் கொண்டு கல்லூரியிலும் சேர்ந்து விட்டேன். ஒரு மாதம் சிந்தாமணி அறையிலிருந்து கொண்டு மேற் குறிப்பிட்டவாறு நடைமுறைப் படுத்திப் பார்த்ததில் சரி வரவில்லை; உடல்நிலை குன்றிவரும் நிலையில் மிதிவண்டிப் பயணம் (நாள்தோறும் ஐந்து மைல்) ஒத்துவரவில்லை. முதலில் இரத்தக் கடுப்பாகத் தோன்றி, நாளடைவில் விடாத வயிற்றோட்டமாக மாறியது. மிதிவண்டிப் பயணத்தைக் குறைத்துக் கொள்ள வானப்பட்டறைத் தெருவில் மூன்று ரூபாய் வாடகையில் ஒர் அறை அமர்த்திக் கொண்டேன். இந்த அறை கல்லூரிக்கு மிக அருகிலிருந்தது. கீழே மிதிவண்டி வைத்துக் கொள்ளவும் வசதி இருந்தது. இந்த நிலையில் பொட்டணத்திலிருந்து திரு. இராமசாமி ரெட்டியாரும் திரு. இராமச்சந்திர ஆச்சாரியும் வந்து திருமணத்தை உறுதி