பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 நினைவுக் குமிழிகள்-1 செய்தனர். என் ஒன்றுவிட்ட தமையனார் திரு. சதாசிவ ரெட்டியாருக்கு ரூ 1000/- ஏற்பாடு செய்து உதவுமாறு ஒர் உருக்கமான கடிதம் எழுதினேன். அவரும் என் எதிர்காலம் படிப்பதற்கு நன்கு அமையும் என்று எண்ணிப் பணத்தைத் தயார் செய்து பொட்டணத்தில் என் மாமனார் வீட்டில் செலுத்திவிட்டார். நானும் கல்லூரிக்குப் பத்து நாள் விடுமுறை போட்டு ஊர் வந்து சேர்ந்தேன். இப்போது உடல்நிைை மிகவும் சீர் குலைந்தது. திருமணம் நடைபெறுமா? என்ற ஐயம் கூட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் திருமண நாள் உறுதி செய்யப்பெற்றுத் திருமணமும் பொட்டணத்தில்(செப்டம்பர் 1936 என்பதாக நினைவு) நடைபெற்றது. மணவறையில் என் நிலையைக் கண்ட பலர் 'திருமணத்தைத் தள்ளி வைத்துக் கொண்டிருக்கலாமே என்று கூட கருத்து தெரி வித்ததாகப் பின்னர் அறிந்தேன். ஒர் இரண்டு மணி நேரம் கூட உட்கார முடியாத நிலை. அடிக்கடி வயிற்றோட்டம் இருக்கும். திருமணம் முடிந்ததும் என் ஒன்றுவிட்ட சோதரர் நல்லப்ப ரெட்டியார் திண்ணையில் அமர்ந்து கொண்டேன்; எதிரிலுள்ள மாட்டுக் கொட்டகை அடிக்கடிப் போய் வரும் கழிப்பிடமாகப் பயன்பட்டது. அவரும் ஒரு பெரிய வாளியில் நீர் நிரப்பி ஒரு குவளையும் வைத்துவிட்டார். அடிக்கடி மாட்டுக் கொட்டகைக்குப் போய் வருவதன் காரணத்தைக் கண்ட ஊர்ப் பொதுமக்கள் என்னைக் கண்டு கழிவிரக்கம் கொண்டனர். ஊரிலுள்ள பலர் இராமசாமி ரெட்டியாரின் குடும் பத்தின்மீது பற்றும்பாசமும் கொண்டிராவிட்டாலும், அவர் தங்கை (என் மனைவி)யின் மீது அதிக பாசமும் பற்றும் கொண்டிருந்தனர். சிற்றுார்களில் மகளிர் ருதுவாகி இரண் டாண்டுகளுக்குள் திருமணமானால் பெற்றோர்கட்கும் மன