பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் திருமண ஆண்டு நிகழ்ச்சிகள் 317 நிறைவு: ஊரார்கட்கும் மகிழ்ச்சி. இந்த நம்பிக்கை அக் காலத்தில் இருந்து வந்தது. இப்போது குறைந்து கொண்டே வருகின்றது. செல்வம் படைத்த வீட்டிலும் நடுத்தரக் குடும்பத்திலும் உள்ள மகளிர் உயர் கல்வி பெறுவதில் ஆர்வங்காட்டி வருவதால் இளங்கலைப் பட்டம் பெறும் வரையிலும் பெற்றோர்கள் திருமணத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை இத்தகைய கல்விபெற வாய்ப்பில்லாத மகளிர்தாம் பதினைந்து அகவை நிரம்பாத நிலையிலும் திருமணத்தை முடித்து விடுகின்றனர். இத்தகைய மகளிர்க்கு அமையும் கணவன்மார்களும் அதிகம் படிக்காத, ஆனால் செல்வ நிலையில் சிறந்து விளங்கும், குடும்பத்தைச் சேர்ந்த வர்களாகவே உள்ளனர். நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த ஆடவர்கள் படித்து உத்தியோகம் பார்க்கும் (அல்லது பார்க்கத் தகுதி பெற்ற) பெண்களையே விரும்புகின்றனர், இன்றைய நிலையில் இருவரும் சம்பாதித்தால்தான் குடும்பம் சரியான முறையில் நடக்கும் என்றும், பிள்ளைகட்கு நன்முறையில் கல்வி தர வாய்ப்பாக அமையும் என்றும் கருதுவது அறிவுடைமையாகும் என்று சிந்திக்க முடிகின்றது. இராமசாமி ரெட்டியார் தங்கை ருதுவாகி ஆறு ஆண்டுகள் கடந்தும் திருமணம் கூடாததுபற்றி ஊரார் கழிவிரக்கம் கொண்டிருந்ததை நேரில் அறிய முடிந்தது. இஃதெல்லாம் பார்ப்பனரல்லாத நடுத்தரக் குடும்பத்தினரைப் பற்றிய நிலை. பார்ப்பன வகுப்பினரைப்பற்றிய நடைமுறை வேறு: எண்ணமும் சி ந் த ைன யு ம் வேறு. எந்நிலையிலும் வரதட்சிணையின்றி அவர்கள் திருமணம் நடைபெறு வதில்லை. இன்றைய நிலையில் பார்ப்பனரல்லாதவரும் வரதட்சிணையை வற்புறுத்துகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க நிலையாகும். பொட்டணத்தில் நடைபெற்ற என் திருமணத்திற்கு கோட்டாத்துாரிலிருந்து ஒரு பேருந்து வைக்கப்பெற்றது. 40