பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 நினைவுக் குமிழிகள்-1 பேர்கள் வரை அதில் போகலாம். நான் போவதற்கு ஒரு மகிழ்வுந்து ஏற்பாடு செய்யப்பெற்றது. கோட்டாத்துாரி லிருந்து என்னுடன் தொடக்க நிலையில் பள்ளியில் பயின்ற இளைஞர்கள் ஒருவரும் வரவில்லை; என் தம்பி கணபதி வந்திருந்தான். திருமணமாகாதவன். சிதம்பரம் (திருமண மானவன்) மனைவியுடன் வந்திருந்தான். ஆனால் இளம் பருவத்தில் நான் பிறந்துவளர்ந்த பெரகம்பியிலிருந்து (என் தாயார் பிறப்பிடம்) என்னுடன் திண்ணைப்பள்ளியில் பயின்ற நாராயணன், இ. மு. துரைசாமி, போஜன், வீரம ரெட்டி என்ற நால்வர் வந்திருந்ததாக நினைவு. இவர்கள் மிதிவண்டிகளில் கோட்டாத்துார் வந்தனர்; பேருந்தில் இடம் இல்லை. மிதிவண்டிகளிலேயே (வண்டிக்கு இருவராக) பொட்டணம் வந்து சேர்ந்தனர். வழி புதிது; வாராத ஊர். எப்படியோ சிரமப்பட்டு வந்து சேர்ந்தனர். பேருந்தில் இடம் ஒழித்துத் தராமை இன்றும் என் உள்ளத்தை வருத்துகின்றது. மிதி வண்டிகள் பழுதாகி, செப்பனிட்டுக் கொண்டு வந்து சேர்ந்ததை நினைக்கும்போது இந்த வருத்தம் மேலும் அதிகமாகின்றது. திருமணம் முடியும் வரையில் வயிற்றைக் கலக்கவில்லை. ஒருவிதமாகச் சடங்குகளுடன் நிறைவு பெற்றது. இதை இப்போது நினைந்து எழுதும்போது ஞானசம்பந்தப் பெருமானது நல்லூர்த் திருமணம் நினைவிற்கு வருகின்றது. பரத்தை நாடி நின்ற பெருமான் தன் மனைவியுடனும் திருமணம் காண வந்த யாவருடனும் சிவபெருமானின் துயபெருஞ்சோதியிற் கலந்தனர். ஆனால் ஞானியார் மரபில் வந்த அடியேன் இகத்தை நாடிநின்றதால் அத்தகைய தெய்வ நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை. என் பிராரப்தம் இன்னும் எதை எதையோ நிறைவேற்றுவதாக இருந்தது என இப்போது சிந்திக்கின்றேன். பிறகு நல்லப்ப ரெட்டியார் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். சோர்வுடன்