பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் திருமண ஆண்டு நிகழ்ச்சிகள் 319 கிடந்த மாப்பிள்ளையை (என்னை) அங்குதான் ஊர் மக்கள் கண்டு என்னுடன் உரையாடி மகிழ்ந்தனர், விரைவில் நலம் பெற வாழ்த்தினர். திருமணத்தன்று இரவில் பட்டணப் பிரவேசம்' (திருவுலா) என்ற நிகழ்ச்சி இருந்தது. திறந்த மகிழ்வுந்தில் ஏறி நானும் என் மனைவியும் ஊர்த் தெருக் களில் வலம் வந்தோம். என் நிலையைத் திருமணத்தில் பார்க்க முடியாதவர்கள் கூடப் பார்ப்பதற்கு இது வாய்ப்பாக இருந்தது. காலுறை மேலுறை போட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரத்தில் வயிறு கலக்கினால் அதற் கேற்றவாறு ஆடையை மாற்றாதிருப்பதற் கேற்றவாறு ஆடைகளை உடுத்திக் கொண்டிருந்தேன். மறுநாள் எல்லோரும் பேருந்தில் திரும்பினர்; நானும் என் மனைவியும் கோட்டாத்துரர் வந்தோம் மகிழ்வுந்தில்; ஒரு வாரம் இருந்து திரும்பி விட்டோம் பொட்டணத்திற்கு. இந்த நிலையில் பெரகம்பியல் என் அம்மான் வீட்டில் பெண் - மாப்பிள்ளை கட்கு விருந்து. போய் வந்தோம். அந்த ஊரே என் உடல் நிலையைக் கண்டு கழிவிரக்கம், கொண்டது. நான் பிறந்து வளர்ந்த ஊரல்லவா ஓரிரு நாட்கள் கழித்து நான் மட்டிலும் கோட்டாத்துார் திரும்பி விட்டேன். கல்லூரிக்கும் போக முடியாத நிலை; அந்த ஆண்டு படிப்பு நின்றது. நிலையை விவரித்துக் கல்லூரிக்குக் கடிதம் போட்டுவிட்டேன். உடலைத் தேற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன். முசிறியில் என்னுடன் பயின்று கல்லூரியிலும் என் வகுப்புத் தோழனாக இருந்த எஸ். அப்பாவும், திருவை யாற்றில் வித்துவான் வகுப்பில் பயின்று கொண்டிருந்த சி. முத்து நல்லப்பரெட்டியும் திருமணத்திற்கு வர முடியாமல் விடுமுறையில் (காலாண்டுத் தேர்வு விடுமுறை) என்னைப் பார்க்கப் பொட்டணம் வந்தனர். ஒருநாள் முழுவதும் தங்கி யிருந்தனர். அவர்களுடன் உரையாடி மகிழ்ச்சியுடன்