பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 நினைவுக் குமிழிகள்-1 பொழுது போக்கினேன். இன்னும் ஒரு வ | ர த் தி ல் கோட்டாத்துர் செல்வதாகவும் உடலைந் தேற்றிக் கொண்டுதான் பொட்டணம் திரும்ப வேண்டும் என்றும் அவர்களிடம் கூறினேன். அவர்களும் நைந்து போயிருந்த என் உடல் நிலையைக் கண்டு பரிதபித்தனர். உடலை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு சொல்லி விடை பெற்றுச் சென்றனர். அக்டோபர், நவம்பர் முடிய கோட்டாத்துாரில் தங்கி விட்டேன். மருந்து ஒன்றும் உட்கொள்ளவில்லை. உணவு முறையாலும், வலிமை தரும் மருந்தை (Tonic)உட்கொண்ட தாலும் உடல் நிலையில் நலம் வளர்ந்தது. டிசம்பர் பதினைந்து தேதி வாக்கில் பொட்டணம் சென்று தங்கினேன். கல்யாணம் செய்தும் பிரமச்சாரி, கடன் வாங்கியும் பட்டினி' என்ற நிலை. என் உடல்நிலை கெட்டதால் இன்ப வாழ்வில் ஈடுபடாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். நல்ல நிலையில் உள்ள என் மனைவியின் மனநிலை? இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைத்துக் கொண்டு மனஅமைதி பெற வேண்டிய நிலையில் இருந்தாள். செப்டம்பரில் (1936) திருமணமாகி சனவரி (1937) இன்ப வாழ்வில் இறங்கும் வரையிலும் பொதுவிடத்தில் ஒரிரு சொற்கள் பகிர்ந்து கொண்டேனேயன்றி தனிமையாக இருந்து பேசும் வாய்ப்பையே தவிர்த்துக் கொண்டேன். சனவரியில் பொங்கல் விழா கழித்து நாமக்கல் நரசிம்ம சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. ஒரு நன்னாளில் மாட்டு வண்டியில் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நாமக்கல்லுக்குச் சென்றோம். பள்ளியில் ஒதி வந்ததன் சிறுவன் வாயில்ஒர் ஆயிர நாமம் ஒள்ளிய ஆகிப் போதஆங்கு அதனுக்கு ஒன்றும்ஒர் பொறுப்பிலன் ஆகி,