பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் திருமண ஆண்டு நிகழ்ச்சிகள் 321 பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறைஎயிற்று அனல்விழிப் பேழ்வாய் தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை" குடைவரையில் நாமக்கல்லில் சேவித்தோம். திசைதிறந்து அண்டங் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்" என்ற கம்பன் காட்டும் நரசிங்கப் பெருமான் பிரகலாதனுக்குக் காட்சி அளித்ததுபோல் எங்கட்கும் காட்சி அளித்தான். நாங்கள் இரணியன் மனம் கொண்டவர் கள் அல்லவே. இரணியன் முன் நரசிங்கம் செய்த ஆரவாரத்தை மானசீகமாகக் கேட்டோம். பிரகலாதன் மனநிலையில் சேவித்தோம். நரசிங்க அவதாரச் சிறப்பில் ஆழங்கால் பட்டோம். மிக்க மனநிறைவுடன் வீடு திரும்பினோம். அன்றிரவோ அல்லது அடுத்த நாள் இரவோ எங்கள் இன்பவாழ்வு தொடங்கியது என்பதாக நினைவு. அப்போது வயது 21. குமிழி-39 39. பொட்டண வாழ்வில் சில நிம்ழ்ச்சிகள் இன்ப வாழ்வில் புகுந்த பின்னர் பெரும்பாலும் பொட்டணத்திலேயே தங்கி விட்டேன். என்னுடைய சுறுசுறுப்பான இயல்புக்குச் சிற்றுார் வாழ்க்கை ஒத்து வர வில்லை. படித்தவர்களே அந்த ஊரில் இல்லை. மாலை நேரத்தில் (4;-6;வரை) திருக்குறள் படித்துப் பாடல்களை விளக்க வேண்டும் என்று என் மைத்துனர் விரும்பினார். 8. பெரி திரு. 2.3 : 8 9. கம்ப. யுத்த. இரணியன்வதை. 127