பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 நினைவுக் குமிழிகள்-1 இதற்குத் தேர்ந்து எடுத்த இடம் இராமச்சந்திர ஆசாரியின் பட்டறை; மிகச் சிறிய இடம். அந்த இடத்திலிருந்து கொண்டுதான் திருக்குறள் பாடம் சொன்னேன். அப்போது திருக்குறளில் அதிகப் பயிற்சியும் எனக்கில்லை. கோபால கிருஷ்ணமாச்சாரியாரின் விளக்கவுரையைத் துணையாகக் கொண்டு ஏதோ சொன்னேன் என்று வைத்துக் கொள்ளலாம் அந்தச் சின்ன இடத்திலிருந்து கொண்டு கேட்டவர்கள் என் மைத்துனர் இராசாமி ரெட்டியார், திரு. இராமச்சந்திர ஆச்சாரி, நடுத்தம்பி’ என வழங்கும் இராசாமி உடையார், இவர்கள் மூவரிலும், நடுத்தம்பிதான் உன்னிப்பாகக் கேட்டார். இராமச்சந்திர ஆச்சாரியின் முகத்திலிருந்து சில கருத்துகள் தாம் அவர் உள்ளத்தில் பதிந்தன என்பதை அறிந்து கொண்டேன். என் மைத்துனர்தாம் ஆசையுடன் இத்திட்டத்தை அமைத்தவர். இடை இடையே அவர் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவார்; இடைஇடையே பால் நினைந்துாட்டும் தாயினும் சாலப் பரிந்து அவரை எழுப்பி குறளமுதம் பருகச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்கள் மூவரிலும் அதிகமாகப் பயனடைந்தது நான்தான். இப்போது, அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்.'" அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநணி இகக்கும்' 10. நன்னூல்.45 11. டிெ-41