பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொட்டண வாழ்வில் சில நிகழ்ச்சிகள் 323 என்ற நன்னூல் நூற்பாக்கள் நினைவிற்கு வருகின்றன. நானோ கல்லூரி மாணாக்கன்; அறிந்து கொள்வதில் பேரூக்கம் காட்டியவன். கேட்ட மூவரோ உலக அநுபவம் உள்ளவர்கள். நாங்கள் நால்வரும் வள்ளுவர் பெருமான் கருத்துகளை கோபால கிருஷ்ணமாசாரியார் விளக்க வுரையைத் துணையாகக் கொண்டு வள்ளுவரை அணுகினோம். என் நூலறிவு உலக அநுபவத்துடன் கலந்தது; நுண்ணறிவு வளரத் தொடங்கியது. சுமார் மூன்று மாதத்தில் திருக்குறள் பற்றிய கலந்துரையாடல் நிறைவு அடைந்தது. சனகாதி முனிவர் நிலையில் இருந்து வள்ளுவர் வாய் மொழியைக் கேட்டு மனநிறைவு கொண்டோம்; மன நெகிழ்ச்சியும் உற்றோம். நல்லப்ப ரெட்டியார் திண்ணைதான் எனது பொழுது போக்கிடமாக இருந்தது. நல்லப்ப ரெட்டியார் தொழில் "சுகpவனம்', புன்செய் வேளாண்மை மானாவாரி விளைச்சல். அதிக வேலை இராது. அறுவடை காலத்தில் மிளகாய், செஞ்சோளம், நிலக்கடலை முதலியவற்றை நடை முறை விலைக்கு வாங்கிப் போடுவார். சுமார் ஐயாயிரம் வரை அந்தக் காலத்தில் புரட்டிக் கொண்டிருந்தார். மூன்று அல்லது நான்கு மாதத்தில் அவற்றை விற்பார். இரண்டாயிரம் வரை இலாபம் கிடைக்கும். எளிய வாழ்க்கை; இத்தகைய வருமானம் அவருக்குப் போதுமானதாக இருந்தது. தவிர லேவாதேவியில் ருபாய் இரண்டாயிரம் வரை வட்டியாக வரும். படிப்பு அதிகம் இல்லை; பேச்சில் சதுரர். உலகியலை நன்கு அறிந்தவர். இவரால் உலகியல் பற்றிய எவ்வளவோ செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. இவர் திண்ணை ஒரு பி.டி.ஐ. (P.H.I) அலுவலகம் போல் செயற்பட்டு வந்தது. நாட்டு நடப்புகளில் ஏதேனும் புதுச்செய்திகள் இங்குக் கிடைக்கும்.