பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பிறந்த சிற்றுார் 5 ஊருக்கு வடகிழக்கில் இன்னொரு பிடாரிக் கோயில் உண்டு. அக்கோயிலைச் சு ற் றி ஏராளமான சுட்ட மண்ணாலான சிலைகள் உள்ளன. ஊருக்கு மேற்கேயுள்ள திருக்கோயிலில் அக்காளும், வடகிழக்கேயுள்ள கோயிலில் தங்கையும் இடங் கொண்டிருப்பதாக ஊ ர் ம க் க ளி ன் நம்பிக்கை. இந்த இரண்டு கோயில் தெய்வங்கட்கும் நாடோறும் பூசை நடைபெறுகின்றது. பூசாரி ரெட்டியார் குடும்பம்' என வழங்கும் ஒரு குடும்பத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஊருக்கு வடக்கே கிணற்றுப் பாசனம் கொண்ட நஞ்செய் நிலங்களும், கிழக்கே மானாவாரியாகப் பயிரிடப் பெறும் புன்செய் நிலங்களும் உள்ளன. ஊருக்குள் வருவோம்.கிழக்கு மேற்காகமூன்றுபெரியவீதி கள் உள்ளன. தென் வடலாக மூன்று சிறு வீதிகள் அவற்றை வெட்டிச் செல்கின்றன. நடுவீதியில் மேற்குத் திசையில் ஒரு பிள்ளையார் கோயிலும் வடக்கு வீதியின் நடுப் பகுதியில் ஒரு சிவாலயமும் உள்ளன. பிள்ளையார் கோயிலில் ஒரு பண்டாரமும், சிவாலயத்தில் ஒரு குருக்களும் நாடோறும் வழிபாடு செய்து வருகின்றனர். நடுத் தெருவின் நடுவில் நான்கு தெருக்களும் சந்திக்கும் இடம் விசாலமானது. இரண்டு இடங்களில் அகலமான கருங்கல் மேடைகள் போடப் பெற்றுள்ளன. இந்த இடத்தைச் 'சந்திக்கல் மேடை" என்று வழங்குகின்றனர். மேல்புறம் உள்ள மேடையில் மாலை நேரங்களில் (இரவு எட்டு மணி வரை) மூத்தவர்கள் உட்கார்ந்து ஊர்க்கதைகளைப் பேசி அரட்டை அடிப்பர். வடபுறம் உள்ள மேடையில் இள வட்டங்கள்’ அமர்ந்து வம்பளந்து கொண்டு இருப்பர். இந்தப் பகுதியில் ஒரு சிறிய சாவடி உண்டு. அங்கு ஒரு சிலர் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையோடு இருப்பதாகக காணப்படுவர். ஊருக்கு மேற்கே பிள்ளையார் கோயிலுக்கு அருகிலும் ஒரு