பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 நினைவுக் குமிழிகள்-1 நல்லப்ப ரெட்டியார் சில சமயம் என்னிடம் பேசுவார் . 'நீ என்னப்பா பணக்கார வீட்டு மாப்பிள்ளை. பத்தாயிரம் தருவதற்கு ரொக்கமாக வைத்திருக்கிறார்கள். 100 சவரன் நகைகள் செய்யப்பெற்றுத் தண்டவாளப் பெட்டியில் தூங்கு கின்றன. இன்றைய கையிருப்பு தண்டவாளப் பெட்டியில் எண்பதாயிரத்திற்குமேல் ரொக்கம் உள்ளது. இந்த அளவு பாண்டு, கொதுவைப் பத்திரங்கள் மேல் உள்ளது' என்பார் "ஆனால் இவையெல்லாம் கைக்கு வந்தபோதுதான் நிச்சயப் படும். பாட்டி நாகம்மாள் பணம் காத்த பூதம்போல் இருக்கின்றாள். எச்சில் கையால் கூடக் காக்கை யோட்ட மாட்டாள். 5, 10, 100 ரூபாய் நோட்டுகட்குக் கூட வேற்றுமை கண்டு அறியாதவள். பணம் குவிந்து கிடக் கின்றது. அந்த அம்மாள் உயிர் இருக்கும்வரை பணம் அப்படியே கிடக்கும். யாருக்கும் உதவாது என்று பேச்சோடு பேச்சாக ஒட விடுவார். "என்னப்பா பேசாமலிருக்கின்றாய்? இவ்வளவு செல்வம் உனக்குவருகிறதென்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றாயா? வாயைத் திறக்கமாட்டாய் போல் இருக்கிறது” என்பார் மெளனமாகக் கேட்டுக் கொண்டு இருக்கும் என்னை நோக்கி, இந்த மாதிரி உரையாடல்களால் நான் என் மனைவிக்குரிய தொகை பத்தாயிரம் என்றும், 100 சவரன் நகைகள் உள்ளன என்றும் அறிந்து கொண்டேன். இந்த விவரங்களையெல்லாம் திருமணத்தை உறுதி செய்ய வந்தபோது என் மைத்துனரோ அல்லது இராமச்சந்திர ஆச்சாரியோ தெரிவிக்கவில்லை. நீ வந்து எங்களோடு ஒட்டிக் கொள். பிறகு எல்லாச் செளகர்யங் களும் தாமாக அமையும்’ என்று சொன்ன சொற்கள் மட்டிலும் என் நினைவில் இருந்தன. திருமணமானபின் நான் அறிந்து கொண்டவை: என் மனைவிக்கென்று 100 சவரனுக்கு நகைகள் செய்து வைக்கப்