பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொட்டண வாழ்வில் சில நிகழ்ச்சிகள் 327 பெற்றுள்ளன. பத்தாயிரம் ரொக்கம் தரும் திட்டம் உள்ளது. இவை தவிர கட்டில், படுக்கை, மேசை, நாற்காலி பீரோ முதலியவையும் உண்டு. ஆனால் இந்தச் செய்தி என் மனத்தில் எந்தவித மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அப்போது என் கல்வியைப்பற்றிய எண்ணத்தைத் தவிர செல்வத்தைப் பற்றிய சிந்தனையே இல்லை. திருமணமாய் விட்டது; பொறுப்பு ஏறிவிட்டது என்ற சிந்தனையே இல்லை. பள்ளிப் பிள்ளையாகவே இருந்தேன். இளங்கலை வரை இனி படிப்பு நன்றாக அமையும் என்ற மனநிறைவு மட்டிலும் என் மனத்தில் இருந்து வந்தது. இதற்குமேல் என் மனம் அலைபாயவில்லை. "படித்தபின் ஏதாவது வேலை யில் அமர்ந்து விடலாம்’ என்ற மனப்பாலை மட்டிலும் இனிமையாகப் பருகிக் கொண்டிருந்தேன். திருச்சி மாவட் டத்தில் அக்காலத்தில் ரெட்டியார் சமூகத்தில் மூன்று பட்டதாரிகளே இருந்தனர். மூவரும் சட்டம் படித்தவர்கள். இருவர் துறையூர் ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; தாயுடன் அரண்மனையைவிட்டு வெளியேறி ஜீவனாம்சம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள். மூன்றாமவர் அலங்கானத்து மிட்டாதார் பொன்னுசாமி ரெட்டியார். நான்காமவர் என் னுடன், எனக்கு முன்னர், பயின்று வரும் அரங்கசாமி ரெட்டி யார். நான் ஐந்தாவது பட்டதாரியாக வந்து கொண்டிருப் பவன். அந்தக் காலத்தில் ரெட்டியார் சமூகத்தில் ஒரு சில பணக்காரக் குடும்பங்களில் படிக்க முயன்று பள்ளியிறுதித் தேர்வுகளைத் தாண்ட மாட்டாமலிருந்தவர்கள் ஒரு சிலர்; இடைநிலை முதலாண்டுப் படிப்பைக் கூட முடிக்க முடியாத வர்கள் ஓரிருவர். இதற்குள் திருமணமாகித் தந்தை நிலையை எட்டி விடுவர். பெரும்பாலும் நான்', 'எனது' என்ற செருக் குடன் காட்சியளிப்பவர்கள். மமதையோடு விளங்குபவர்கள். திருமண நிகழ்ச்சிகட்குப் போகும்போது இரட்டை மாட்டு வண்டியில் வந்து இறங்குவதைப் பார்க்கலாம். எங்கோ