பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 நினைருக் குமிழிகள்-1 ஒரிருவர் மகிழ்வுந்து வைத்திருந்ததையும் காணலாம். அக்காலத்து மகிழ்வுந்து விலையே ரூ 1500). தான்: பெட்ரோல் காலன் விலை பதினாலு அனாதான்; அதாவது இன்றைய நாணய மாற்றில் சொன்னால் 88 காசுதான். 'உன் மனைவி திருமணத்திற்கு முன் 100 சவரன்; பத்தாயிரம் ரொக்கம்’ என்று 'கன்யாசுல்கமாகச் சொல்வி வி ள ம் ப ர ப் ப டு த் தி க் கொண்டிருந்தார்கள். சில பணக்காரர்கள் வந்ததும் பெண்ணைப் பார்த்து விட்டு நிலையையும் அறிந்து,சென்றார்கள். ஒரு மிட்டாதாரர் கூட இரண்டாந்தாரமாகக் கேட்டுச் சென்றார். எல்லோருமே பாட்டியின் சொரூபத்தை அறிந்து கொண்டனர். திருமணத் தில் சபையில் பத்தாயிரம் ரொக்கத்தையும் 100 சவரன் நகை களையும் பல்லோர் காண வைத்து அவற்றை அன்றே மாப்பிள்ளைவசம் சேர்த்துவிட வேண்டும் என்ற நிபந்தனை? போட்டனர். ஒரு மிட்டதார் மட்டிலும் நகைகள் தந்தால் போதும்; இருபதாயிரம் கடனாகக் கொடுத்தால் போதும்' என்ற நிபந்தனை போட்டார். பாட்டிக்கும் பெண்ணின் பெற்றோர்க்கும் இந்த நிபந்தனை பிடிக்கவில்லை. (அவர்கள் மனக்கருத்தை ஃபிராய்டு போன்ற உளவியலறிஞர்களாலும் அறிந்து கொள்ள முடியாது) என்று கூறும் அளவுக்கு அவர் தம் கல்மனத்தை எல்லோரும் அறிந்து கொண்டனர். நீ ஏதோ சிறு பையன்; கள்ளம் கபடம் அறியாமல் ஒப்புக் கொண்டு விட்டாய், இது இலவுகாத்த கிளிபோல் ஆவாய்' என்று கூட என்னை நினைக்க வைக்கின்றது” என்று கோடிட்டுக் காட்டியும் விட்டார். திரு நல்லப்ப ரெட்டியார் 'எனக்கு இப்போது எதைப் பற்றியும் சிந்தனை இல்லை; பட்டப்படிப்பு முடிந்தால் போதும்; இதைக் கருத்தில் கொண்டே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன்’ என்றேன். நல்லப்ப ரெட்டியார் என்னைச் சுத்த அசடு என்று எடை போட்டு விட்டார். உலகம் அறியாத அப்பாவி;