பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு புதிய தகவல் 329 புத்தகப் பூச்சி' என்று மதிப்பீடு செய்து விட்டார். இதை அவர் பேச்சின்மூலம் குறிப்பாக அறிந்து கொள்ள முடிந்தது. " உன் எண்ணம் சரிதான். போகப் போகத் தெரியும்’ என்று ஒரு புதிர் போட்டு வாளா இருந்து விட்டார். இதற்கு மேல் ஒரு பள்ளிப் பையனைக் குழப்ப விரும்பவில்லை, உலகியலறிந்த அந்த உத்தமர். இந்தப் புதிர் அப்போது "பிரம்ம சூத்திரம் போல் இருந்தாலும் நாளடைவில் அஃது பாஷியம் போல் விளக்கம் அடையும் என்பதை அப்போது என்னால் அறியக் கூடவில்லை. என்ன இருந்தாலும் பள்ளிப் பிள்ளைதானே. பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்பதை நல்லப்ப ரெட்டியார் நன்கு அறிந்திருந்தார். நான் கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். குமிழி-40 40. ஒரு புதிய தகவல் இத் தகவலையும் மணியக்காரன் வீட்டுத்திண்ணையில் தான் அறிந்து கொண்டேன். ஒரே தொடர்ச்சியாக அறிந்து கொள்ளவில்லை; து ணு க் கு க ளா க த் தா ன் அறிந்து கொண்டேன். இடைஇடையே என் மைத்துனரே தந்த துணுக்குகளும் இவற்றுடன் சேர்ந்து கொண்டு தொடர்ச்சி யான ஒரு வரலாறு உருவாகின்றது இந்தக் குமிழியில். 19281929 ஆண்டில் என் மைத்துனரின் திருமணம் நடைபெற்றது. பெண் இராசாம்பாள் என்ற பெயருடையவள். ஒக்கரையி லிருந்து (துறையூர் ஆத்தூர் சாலையில் வேங்கடாசல புரத்திற்கு ஒரு கல் தெற்கே மேற்கு நோக்கிப் பிரியும் 2-3 ஃபர்லாங் நீளமுள்ள ஒரு சிறு சாலை இணைக்கும் ஒரு சிற்றுார்) எருமைப்பட்டிக்குத் தன் மாமனார் வீட்டிலேயே குடியேறிய சாம்பசிவ ரெட்டியாரின் முதல் மனைவியின்