பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நினைவுக் குமிழிகள்-1 மூலம் பெற்ற பெண்; முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது மனைவியாக அவள் தங்கையையே திருமணம் செய்து கொண்டவர்; இந்த அம்மையார் மூலம் ஒரே ஒரு மகன் உண்டு; பெயர் சுந்தரராசன், என் வயதையுடையவர். இவர் அப்பொழுது திருமணம் ஆகாதவராக இருந்தார்; இராமசாமி ரெட்டியாருக்குத் திருமணம் ஆகி ஏழாண்டு கள் வரை மக்கட்பேறு இல்லை. இக்குறையை இரு குடும்பத்தாரும் உணர்ந்தனர்; அந்தக் காலத்தில் (ஏன் இந்தக் காலத்தில் கூடத்தான்) செல்வர்கள் குடும்பத்தில் பிறந்த ஆடவருக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் மக்கட் பேறு இல்லாதிருந்தால் செல்வச் செழிப்பின் இறுமாப்பால், பிள்ளையில்லாக் குறையை மனைவியின்மீது ஒரு பழியாகச் சுமத்தி இரண்டாந்தாரமாக வேறொரு பெண்ணை மணந்து கொள்ளும் வழக்கம் நடைமுறையிலிருந்து வந்தது. சில இடங்களில் முதல் மனைவியின் தங்கையொருத்தி வயதுக்கு வந்தவளாக இருந்து அவளையே இரண்டாந்தாரமாக மணந்து கொள்ளும் வழக்கமும் இருந்தது. இதனால் குடும்பத்தில் கிளைக்கும் சச்சரவுகள் இல்லாதொழியும் அல்லது குறையும். எது இருந்தாலும் இல்லாவிடினும் நீதி மன்றத்தில் தொடுக்கப்பெறும் வழச்காவது இல்லா தொழியும். சாம்பசிவ ரெட்டியார் திருமணம் புரிந்து கொண்ட குடும்பம் சின்னப் பண்ணையார் வீடு என்பது. இந்தக் குடும்பத்தில் தைலம்மாள் என்றவருக்கு மூன்று பெண்கள்; இரண்டு பெண்களைச் சாம்பசிவ ரெட்டியாாே மணந்து கொண்டார், மூன்றாவது பெண்ணை இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் கணக்கப்பிள்ளை வேலை பார்த்த (பனைமரத்துப்பட்டியைச் சே ர் ந் த. வ ர் ) ஒருவருக்கு வாழ்க்கைப்படுத்தினர். என் திருமணம் நடைபெற்ற ஒரு