பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு புதிய தகவல் 331 மாதத்திற்கு முன்னர்தான் இத்திருமணம் நடைபெற்றது. என் மைத்துனருக்குப் பிள்ளையில்லாத குறை சாம்பசிவ ரெட்டியார் குடும்பத்திற்கு ஒரு திகிலை உண்டாக்கி விட்டது; தன் மருமகன் பிள்ளையில்லாத குறையைத் தம் மகள் மீது போட்டு வேறொரு பெண்ணை இரண்டாந்தார மாக மணந்து கொள்ளக்கூடும் என்ற அச்சம் நாளடைவில் வளரத் தொடங்கியது. இதனால்தம் மருமகனின் தங்கையை (என் மனைவியை) தம் மகன் சுந்தரராஜுக்குத் திருமணம் முடித்துக் கொண்டால் எந்தவிதப் பிரச்சினையும் எழாதிருக்க வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணினார் போலும்! குடும்பத்தில் அனைவருடனும் கலந்து பேசியபின் இந்த எண்ணம் சரி என்றே அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்ட முடிவாயிற்று. சாதாரணமாக எல்லாக் குடும்பங்களிலும் இத் த ைக ய நிலை ஏற்படும்போது எடுக்கப்படும் இயல்பான முடிவேயாகும் இது. நாளடைவில் இது ஒரு சதித் திட்டமாக வளரத் தொடங்கியது. இதற்கு வேறொரு நிகழ்ச்சி வித்திடக் காரணமாக இருந்தது. இது இறுதியாக என் மைத்துனர் தம் மனைவியையே 'தள்ளுபடி: செய்வதற்கும் காரணமாயிற்று. என் திருமணத்தின்போது கூட என் மைத்துனரின் மனைவி ஏழாண்டுகள் கழித்து ஏழு மாத கர்ப்பமாகவும் இருந்தாள். என் திருமணத்திற்கும் அவள் பெற்றோர் அனைவரும் வந்திருந்தனர். வேறொரு நிகழ்ச்சி என்று மேலே குறிப்பிட்டேன் அல்லவா? அஃது என்ன? என் மைத்துனரின் திருமணம் ஆகி நாலாண்டுகள் கழிந்ததும் அவர் மனைவிக்கு சாமியோ (பேயோ) பிடித்துக் கொண்டது. அடிக்கடி மருள் வருமாம். அந்த மருள்படி ஏதேதோ வாசகங்கள் வெளிப்படும்" அவற்றின்படி குடும்பத்தினர் செயற்படுவார்கள். என் மைத் துனரிடம் மூன்று குறைகள் இயல்பாகவே காணப்பெற்றன (i) தீவிரமான கடவுள் பக்தி (2) அளவுக்கு மீறிய சோதிடப்