பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 நினைவுக் குமிழிகள்-1 பைத்தியம் (3) எதையும் ஆராயாமல் நம்புவது. இந்த மூன்றுமே அவர்தம் வாழ்க்கையைப் பாதித்தன. தவிர, குடும்பத்திலும் எந்த விஷயத்திலும் அதிகப் பொறுப்பு தரப் பெறவில்லை பண விஷயம் என்றால் சொல்ல வேண்டிய தில்லை. செல்வக் குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்தும் எந்தவிதப் பொறுப்பும் தரப்பெறாமல் இருந்தது அவர் மனத்தை அதிகமாகப் பாதித்து விட்டது. உளவியல் அடிப்படையில் ஆய்ந்தால் இவ்வுண்மை உறுதிப்படும். இவரைப்பற்றிய செய்திகள் அடுத்த குமிழியில் வெளிவரும். மனைவிக்கு சாமி பிடித்துக் கொண்டதாகத் தெரிந்ததும் இதில் அவர் அதிக அக்கறையுடன் செயற்பட்டார். என்று நல்லப்ப ரெட்டியார். சொன்னார். எருமைப்பட்டிப் பக்கத்தி லுள்ள ஒரு மரத்தடிக் கறுப்பண்ணசாமி வந்து சில சமயம் ஆட்டும். இராசாம்பாள் தலைவிரி கோலமாக ஆடுவாளாம். அதிகமாகக் கலாட்டா செய்யாமல் அடக்கமாகத்தான் ஆடு வாளாம். கண்ணைப் பயங்கரமாக விழித்து, 'பிள்ளைகளே, என் கோயிலுக்கு வரவேண்டும்; எனக்குப் பூசை போட வேண்டும்; அப்போதுதான் உங்கள் குறையைத் தீர்த்து வைப்பேன்’ என்று கறுப்பண்ணசாமி பேசுவாராம். கடவுள் பக்தி உள்ள என் மைத்துனருக்கு இஃது அதிகமாக மனத்தைக் கவர்ந்தது. குழந்தைப் பேறு இல்லாத குறையைத்தான் இப்படிச் சுவாமி தன் மனைவி மீது ஆவேசித்துப் பேசுகின் றார் என்று நினைத்து அதை நிறைவேற்றுவதற்கு எருமைப் பட்டிக்குக் குடும்பத்துடன் மாட்டு வண்டியில் செல்வாராம். ஏதோ தவறாக நினைத்துக் கொண்டு மாமனார் வீட்டை எட்டிப் பார்க்காதிருந்தவருக்கு இப்போது மாமனார் வீட்டுக்குச் சுவாமியின் அருளால்” போக வேண்டி நேர்ந்தது. சாம்பசிவரெட்டியார் குடும்பம் தம் மருமகனைத் தம் வீட்டிற்கு அடிக்கடி வரவழைப்பதற்கு இஃது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஆங்கிலமே படிக்காத அந்தப்