பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு புதிய தகவவ் 333 பெண், உருது (துலுக்கு) பேசத் தெரியாத அந்தப் பெண் உருதுபேசுவதும் அனைவரையும் வியக்க வைத்ததாம். பேய் ஏறி இருக்குமோ என்றுகூட, ஐயப்பட்டார்களாம். படிப்பே இல்லாத குடும்பம்; மூடப்பழக்கங்களுக்கு அடிமைப்பட்டனர். ஒவ்வொருவர் சிந்தனையும் ஒவ்வொரு விதமாகச் செயற் பட்டு வீட்டில் ஒரே குழப்ப நிலையும் ஏற்பட்டது. இந்த நடைமுறைத் திறன் (Strategy) என் மைத்துனர் குடும்பம் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து விடுவார்கள் என்பதற்குத் தற்காலிகமாக அணை போட்டது. தடையும் விதித்தது போலாயிற்று. இப்படிச் சுவாமி ஆடுவது அடிக்கடி நிகழ்வது ஏதோ ஒரு சமயம் என நிகழ்ந்தது. இந்தக் காலத்தில் பொட்டணத்தில் தம் பெண்ணுக்குத் திருமணத்தை விரைவில் முடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்தார்களாம். பணக்காரர் வீடுகளுக்குச் சொல்லி அனுப்பினார்களாம். யார் யாரோ வந்து பார்த்தார்களாம். முக்கியமானவர்கள் யாராவது பெண் பார்க்க வருங்கால், அஃது ஒருகால் முடியும் திருமணம் என்பது தெரிந்தால், அப்போது கறுப்பண்ணசுவாமி இராசாம்பாள்மீது ஆவேசித்து நிற்பாராம். ஓர் ஆறு மாதத்திற்குள் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக நல்லப்ப ரெட்டியார்முலம் அறிந்தேன். ஒன்று : யாரோ ஒரு செல்வர் வீட்டிலிருந்து பெண் பார்க்க இரட்டை மாட்டு வில்வண்டியில் வந்திறங்கினர். உள் வீட்டில் திருமணத்திற்காக ஏழெட்டு மண்குடங்களில் (எள், மணிலா செக்கு போட்டு) எண்ணெய் நிரப்பி வைத் திருந்தனர். அன்றுதான் சுவாமி ஆவேசம் வந்துவிட்டது. கண்விழி பிதுங்கும் நிலையில் உருத்துப் பார்த்துத் தலைவிரி கோலமாக சுவாமி ஆடத் தொடங்கினாள். 'வீட்டிற்குள் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது. உள்ளே சென்று பாருங்கள்'