பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 நினைவுக் குமிழிகள்-1 என்பது ஆவேசப் பேச்சு எல்லா எண்ணெய்க் குடங்களும் உடைபட்டு வீடெல்லாம் எண்ணெய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பெண் பார்க்க வந்தவர்கள் உணவு உண்டு செய்தி அனுப்பினதாகப் போனவர்கள் திரும்பி வரவில்லை. ‘சகுனம் சரியில்லை' என்று நின்றனர். இரண்டு : இன்னொரு நாள் ஒரு செல்வர் குடும்பம் பெண் பார்க்க வந்தது. பெண்ணைப் பார்த்தனர். பகல் விருந்து உண்டு பேசிக் கொண்டிருந்த பொழுது சுவாமி ஆவேசம் வந்து விட்டது, இராசாம்மாளுக்கு. தலைவிரி கோலமாக ஆடத்தொடங்கினாள். 'இன்று ஒரு புதிய சோதனை வந்துள்ளது. புழக்கடையில் கறிவேப்பிலை மரத்தடியில் சென்று பாருங்கள்' என்ற ஆவேசப் பேச்சு தொடங்கியது. புழக்கடையில் சென்று பார்த்தபோது நீராடு வதற்குக் களைந்து வெளுப்பதற்காக ஒதுக்கி வைக்கப் பெற்றிருந்த நாலைந்து பட்டுச் சேலைக்குள் கொள்ளிக் கட்டை செருகப்பெற்று ஆடைகள் தீப்பற்றி எரிந்து கொண் டிருந்தன. பெண் பார்த்துச் சென்றவர்கள் இஃது ஒரு பெரிய அபசகுனம்' என்று நினைத்துத் திரும்பி வரவே இல்லை. இப்படி இரண்டு முறை திருமணம் பேசுவதில் தடை ஏற்பட்டு விட்டது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் என் மைத்துனரைச் சிந்திக்க வைத்தது. ஆதி முதல் நடைபெற்ற நிகழ்ச்சிகளை யெல்லாம் சந்தேகக் கண் கொண்டு பின்னோக்கிப் பார்க்கத் தொடங்கினார். ‘சுவாமி ஏறியதே ஒரு சூது’ என்று முடிவிற்கும் வந்தார். இதனால் மனைவியை வெறுக்கத் தொடங்கினார். அடிக்கடி எருமைப் பட்டியிலிருந்து வண்டி வரும் மகளைக் கூட்டிச்செல்வதற்கு. இவர் போகக் கூடாது: என்று தடைபோடுவார். 'வண்டியில் ஏறு என்று தந்தையின் கட்டளையாக இருக்கும். வண்டியில் ஏறாதே’ என்பது