பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு புதிய தகவல் 335 கணவனின் கட்டளையாக இருக்கும். என் வார்த்தையை மீறிச் சென்றால், திரும்பி வாராத நிலை ஏற்பட்டு விடும்’ என்பது கணவனின் எச்சரிக்கையாகவும் இருக்கும். பாவம், பிழைக்கத் தெரியாத பெண். தந்தையின் கட்டளையையே பின்பற்றிச் செல்வாள். இது வினாச காலத்திற்கு விபரீத புத்தியாக இருப்பதை அப்போது அப்பெண் அறியாவிடினும் காலமெல்லாம் அழுத முகத்துடன் இருந்து வருவதைப் பின்னராவது நினைந்து வருந்தி இருக்கவேண்டும். என் திருமணம் நிறைவேறி சின்னாட்களுள் ஏழாவது மாத கருப்பத்துடன் இருக்கும் இராசாம்பாளை கருவுயிர்ப் பதற்குக் கூட்டிச் சென்று விட்டனர். என் மைத்துனரும் நன் மனத்துடன் அனுப்பி வைக்கவில்லை. 'இதுதான் இறுதிப் பயணம். இனி அவள் திரும்பி வரக் கூடாது. அப்படிச் சேயோடு திரும்பி வரினும் இல்லத்தினுள் நுழைய அனுமதியேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். தம் தாய் தந்தையரிடமும் அவளைக் கூட்டி வருவதற்கு யாதொரு ஏற்பாடும் செய்தல் கூடாது என்று சற்றுக் கடுமை யாகவே சொல்லி விட்டார். தம்முடைய தங்கையின் மணம் தடைப்படுவதற்கு எவ்வளவோ இன்னாச் செயல்கள் செய்து விட்டாள்; எப்படியாவது அவளைத் தன் தம்பிக்குக் கட்டி வைப்பதற்கு இவ்வளவு .ெ கா டு ைம க ளு ம் இழைத்தாள் பாவி' என்று தன் மனைவியின்மீது சொல்லொணாத அருவருப்புக் கொண்டு விட்டார் என் மைத்துனர் என்று பலர் பலவாறாகப் பேசிக் கொண்டதைப் பொட்டணத்தில் நான் தங்கியிருந்தபோது என் காதால் கேட்க முடிந்தது. "கெடுமதி கண்ணுக்குத் தோற்றாது என்ற முதுமொழி எவ்வளவு அநுபவத்திற்குப் பின் எழுந்திருக்க வேண்டும்? மக்கள் படும் இன்னல்கட்கெல்லாம் ஆசைதான் காரணம்