பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 நினைவுக் குமிழிகள்-1 என்ற பேருண்மையைப் புத்தர் பெருமான் பல்வேறு இடர்ப் பாடுகளைக் கடந்து எத்தனை யாண்டுகள் கழித்துக் கண்டறிந்தார்? இதனை இப்போது எத்துணைப் பேர் உணர்கின்றார்கள்? எது எப்படியாயினும் அறிவுடைய ஒரு பெண் அறிவுடையவனைத் தன் மணாளனாகத் தேர்ந் தெடுத்துக் கொள்ள வேண்டும். அங்ங்ணம் தேர்ந்தெடுத்துக் கொண்டபின் இவற்றை உணர்ந்து தெளியவேண்டும். ‘மணப்பருவம் எய்திய நங்கை தான் பிறந்தவிடத்தில் பெறும் இன்பமே பெரிதென்று கருதி மகிழ்ந்திருப்பாளாயின், அவள் வாழ்க்கை நிறைவுடையதாகாது. பெற்றோரது அன்பும், உடன் பிறந்தாரது துணையும், உறவினரின் ஆதரவும் மிக விரும்பக் கூடியவையாயினும், இவற்றிலேயே மூழ்கிக் கிடந்து வாழ்நாளைக் கழிப்பது பொதுவாகப் பெண்மைக்கு அழகன்று. பிறந்தவிடம் கடக்கும் நாளன்றோ? அவள் மகளாய்ப் பிறந்ததன் நோக்கம் கைகூடும் நாள்! ஒரு மகள் பிறிதொரு வீட்டில் மருமகளாகுந்துணையும் அவள் பிறந்து வளர்ந்த நோக்கம் நிறைவேறுவதில்லை. தாய்தந்தையரின் அன்பு சாலுமாயின் மணம் என்பது ஒரு மகளுக்கு வேண்டுவதில்லை. பிறந்த இடத்தினும் பெரிய இடம் இல்லை எனத் துணிந்தவள், தன்னை மறப்பதும் இல்லை; தலைவனை அறிவதும் இல்லை. இங்ங்னமே பிறந்த இடத்தின் பற்றில் சிக்கி, பெரிய இடம் போகும் வகை அறியாது உயிர்கள் ஒடுங்கி இருக்கின்றன. பிறவித் தொடர்பை அறுக்கும் ஆற்றலுடைய காதலைப் புகட்டும் ஒர் உயர் மகன் தோன்றும் அளவும், தாய்தந்தையரின் செ ல் வத் ைத யும் அன்பையும் காட்டிலும் இனிய தொன்றில்லை என்று மயங்கி இருக்கும் மகளைப்போல், இறைவன் அருள் காணும் அளவும் உலக இன்பத்தில் உயிர் ஆழ்ந்து கிடக்கும். உயிர்கள் எல்லாம் இறைவனிடமிருந்து தோன்றுவன ஆதலால், அவற்றிற்கு இளமையிலேயே