பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பழைய நிகழ்ச்சி 337 அவனைப் பற்றிய உணர்ச்சி இயல்பாகவே உண்டு. ஆனால் நாளாவட்டத்தில் பிற பற்றுகள் வளர்ந்து அதை அடக்கி ஒடுக்குகின்றன. காதலாகிய பெரும் பற்று வந்து மங்கையின் அகத்தை நிரப்பிப் பிறந்த இடத்தில் இருந்தவளை ஈர்த்துப் பிறஇடம் சேர்க்கும் திறத்தை ஒரு மங்கை உணர்ந்து தெளிதல் வேண்டும். 'குலமகட்கு அழகு கொழுநனைப் பேணுதல்' என்ற பேருண்மையை உணர்ந்தால் கற்புடைய பெண் அடிக்கடி தன் தாய்வீடு போக எண்ணாள். இத்தகைய உண்மைகளை அறியாத பெண்டிர் நன்மகளிர் ஆகார்; காலமெல்லாம் கவலையில் ஆழ்ந்து கிடக்கும் நிலை அவர்களை வந்தடையும். குமிழி.41 41. ஒரு பழைய நிகழ்ச்சி 1925-26 என்று நி ைன க் கி ன் றே ன். நான் கோட்டாத்துரில் தொடக்கநிலைப் பள்ளியில் பயின்று வந்த காலம் அது. அக்காலத்தில் திரு. இராமசாமி ரெட்டியாரும், ஆலத்துடையாம் பட்டி எனக்கு அண்ணன் முறையிலுள்ள இன்னொரு இராமசாமி ரெட்டியாரு கோட்டாத்துருக்கு வந்து போனதாக நினைவு, முதலில் குறிப்பிட்ட இராமசாமி ரெட்டியார் பொட்டணம் நாமக்கல் வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்; இவருக்கு ஆலத்துடையாம் பட்டியில் (துறையூர் வட்டம்) நல்ல வளமான நஞ்செய் நிலங்கள் இருந்தன. எங்கு மழை பெய்தாலும் பெய்யாவிட்டிலும் கொல்லி மலையில் மழை பெய்து ஆலத்துடையாம் பட்டியிலுள்ள இரண்டு ஏரிகளும் நிரம்பி விடும். நிலங்கள் இருபோகம் 12. வெற்றி வேற்கை-12 —22