பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 நினைவுக் குமிழிகள்-1 விளைபவை; குத்தகைக்கு விட்டிருந்தனர். ஆண்டொன்றுக்கு 125 மூட்டை நெல் வந்து விடும். இந்த நிலங்களைப் பார்க்க வந்தவர், அவ்வூரிலுள்ள இன்னொரு இராமசாமி ரெட்டியாரை இட்டுக் கொண்டு கோட்டாத்துரர் வந்தார். உறவினர்களைப் பார்த்து அறிந்து கொள்ளவேண்டும் என்று அப்போது இராமசாமி ரெட்டியார் சுமார் 25 அகவை நிறைந்த இளைஞர்; கரிய திருமேனி. பார்ப்பதற்கு தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோமுட்டிச் செட்டியாரைப்போல் தோற்றம் அளிப்பார். காதில் வெள்ளைக்கல் கடுக்கன்: வலது கைவிரலில் மோதிரமும், மணிக்கட்டில் டாலர் தொங்கும் தங்கச் சங்கிலியும் திகழ்ந்தன. திருமணப் பேச்சு நடந்து வருவதாக உடன் வந்த இன்னொரு இராமசாமி ரெட்டியார் தெரிவித்தார். பொட்டணத்திலும் நன்செயும் புன்செயுமாக 20 ஏக்கர் நிலங்கள் இருந்தன. கையில் ரொக்கம் ஒரு இலட்சம் இருப்பதாகப் பேசிக் கொண்டார் கள். இவ்வளவு செல்வம் இருந்தும் 25 வயது நிரம்பிய இளைஞருக்கு பண்ணை நிர்வாகத்தில் பொறுப்பு தரப்பெற வில்லை. பெற்றோர்கட்கு விவேகம் போதாது. தாயைப் பெற்ற பாட்டி நாகம்மாள் பணம் காத்துவரும் பூதமாகத் திகழ்ந்தாள். சிக்கனமான குடும்பம் என்று சொல்ல முடியாது; கஞ்சத்தனம் நிரம்பிய குடும்பம் என்று சொல்லி வைக்கலாம். ஏதோ ஒரு பெண்ணைத் திருமணத்தை உறுதி செய்தார் கள் பெற்றோர்கள். அக்காலத்தில்கூட திருமண ஏற்பாட்டில் பணமும் மணமகள் கொண்டுவரும் சீர்வரிசைகளும்தான் (இதனை வரதட்சிணை என்று சொல்வதற்கில்லை) திருமணத்தை உறுதி செய்யும் இன்றியமையாத கூறுகளாக இருந்தன. அக்காலத்தில் திருமண விஷயத்தில் மணமக னுக்கோ மணமகளுக்கோ எந்தவித சுதந்திரமும் இல்லை,