பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பழைய நிகழ்ச்சி 339 பெற்றோர்கள் உறுதி செய்தபடி இவர்தம் இசைவு பெறாமலேயே திருமணங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் இராமசாமி ரெட்டியார்த் தமக்கு உறுதி செய்யப்பெற்ற மணப்பெண்ணை விரும்பவில்லை. ஏன் விரும்பவில்லை என்பது எவருக்கும் தெரியாத புதிராவே இருந்தது. பெண் தான் பிடிக்கவில்லை போலும் என்றுதான் பெரும்பாலோர் கருதினர். இராமசாமிரெட்டியார் ஐந்து வகுப்பு வரையிலும் தான் படித்தவர். அவ்வளவு செல்வமிருந்தும் குடும்பத்தில் ஒரே ஒர் ஆண்பிள்ளையாக இருந்தும் பெற்றோர்கள் இவர் கல்வியில் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. இராமசாமி ரெட்டியாருக்கும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாதிருந்தது வியப்பாகத்தான் இருந்தது. இவர் சராசரி அறிவுடைய இளைஞர்தான். படிக்கும் எண்ணம் தோன்றாதிருந்தது இவருக்கு இத்திசையில் ஊழ் இல்லை போலும், திருமணத்தை எப்படியும் பெற்றோர்கள் நடத்தியே தீர்வார்கள் என்ற அச்சம் தோன்றிவிட்டது. ரூ 1000/=ஐ வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டார். தன்னைத் தேட வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இல்லத்தைத் துறந்தார். பணம் கையிலிருக்கும்வரை மனம் போனபடி பல இடங்களில் சுற்றித் திரிந்தார். மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் என்ற உலகநாத பண்டிதரின் வாக்கைக் கற்றாரோ கற்கவில்லையோ என்பது தெரியாது. அப்படிக் கற்றிருந்தாலும் அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, எந்தச் சிறுவனுக்காகிலும், இத்தகைய நீதிவாக்கியங்களின் தத்துவத்தைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுமா? கையிலுள்ள பணம் தீரும்வரை சுற்றியலைந்துவிட்டு இறுதியில் திருப்பதி போய்ச் சேர்ந்தார். திருப்பதியில்