பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 நினைவுக் குமிழிகள் -1 எங்கோ ஒரு குகையில் தங்கி விட்டார். கோகர்ப்பம், ஆகாய கங்கை, பாதாள கங்கை (பாபவிநாசம்) என்ற திருமலையி லுள்ள மூன்றிடங்களுக்குத்தான் திருத்தலப் பயணிகள் போய்வருவதுண்டு. அக்காலத்தில் திருமலைக்குப் போவதற்கு பேருந்துகள் வசதிகள் இல்லை. நடராஜா சர்வீசை நம்பித் தான் செல்லவேண்டும். நான் திருப்பதியில் பணியாற்றிய போது (1960-1977) இந்த இடங்களைப் பார்த்திருக்கின்றேன் இந்த மூன்று இடங்களில் ஒரு சில சாதுக்களைப் பார்த்திருக் கிறேன். இராமசாமி ரெட்டியார் வரலாற்றைச் சிந்திக்கும் போது இவர் ஆகாய கங்கையிலோ கோகர்ப்பத்திலோ சாதுக்களோடு தங்கியிருக்க வேண்டும் என்று ஊகித்தேன். ஒரே பையன் மறைந்ததைக் கண்டு பெற்றோர்கள் கவலைப்பட்டிருக்க வேண்டும். பணம் காத்த பூதமாக இருந்த பாட்டி நாகம்மாளுக்கும் கவலை தோன்றியிருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து நாலா பக்கமும் தேட ஏற்பாடு செய்தார்கள். ைபயன் ஒருவர் கண்ணுக்கும் தென்படவில்லை. இல்லம் விரிச்சோடி இருந்தது. எல்லோரும் கவலையில் ஆழ்ந்திருந்தனர். கையில்பணம் தீரும் வரையில் சுற்றித்திரிந்தவர், இந்தச் சாதுக்களோடு தங்கியிருந்தவர், உணவின்றிப் பல நாள் கிடந்தார். உடல் மிகவும் இளைத்து விட்டது. தம் கதையைச் சாதுக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். இது எப்படியோ திருமலையில் கைங்கரியம் புரிந்து வந்த அந்தணர் ஒருவருக்கு எட்டியது. அவர் இவரைச் சந்தித்து இவர் வரலாறு முழுவதையும், குடும்ப நிலையையும், இவர் வீட்டைவிட்டு வெளியேறிய காரணத்தையும் தெரிந்து கொண்டார். முகவரியைத் தெரிந்து கொண்டு விவரமாகக் கடிதம் போட்டார். கடிதம் கண்டதும் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். திருப்பதி சென்று பையனை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.