பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பழைய நிகழ்ச்சி 341 ஒரிரண்டு ஆண்டுகள் கழித்து இராமசாமி ரெட்டி யாருக்குத் திருமணம் நடைபெற்றது. இராமசாம்பாள் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இந்தத் திருமணம் 1928 வாக்கில் நடைபெற்றதாக நினைவு. அப்போது நான் கோட்டத்துாரில் தொடக்கநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் அன்னையார் வேறோர் உறவினரான அம்மையாருடன் என்னையும் இட்டுக் கொண்டு இத் திருமணத்திற்கு சென்றதையும், திருமணத்தில் எனக்கு ஒரு சிறு சரிகை வேட்டியும் சரிகைத் துண்டும் தந்ததையும் நினைவு கூர்கின்றேன். சட்டைபோடும் வழக்கம் இல்லாத தால் சட்டை வாங்கித் தரவில்லை. இந்தத் திருமணத்திற்கு வந்தபோது நான் மிகச் சிறியவன், பத்து ஆண்டுகள் கழித்து இந்த வீட்டில் இராமசாமி ரெட்டியாரின் மருதனைய தங்கையை மணந்து கொள்வேன் என்பது ஒருவர் நினைவிலும் எழவில்லை. தொல்காப்பியர் குறிப்பிடும் பாலது ஆணை’யை ஒருவரும் அறியவில்லை. பிற்காலத்தில் நான் தமிழன்னையால் ஆட்கொள்ளப் பெறுவேன் என்பதுதான் யாருக்குத் தெரிந்தது? திருமணம் முடிந்து ஓரிரு நாட்களில் ஊர் திரும்பியது நினைவிற்கு வருகின்றது. இக்காலத்தில்தான் என்னிடம் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்ற துடிப்பு எழுந்தது. வழி தெரியாமல் திகைத்தேன். முசிறியில் உயர்நிலைப்பள்ளியில் சேர முயன்றேன்: (ஆகஸ்டு-1930) சேரமுடியாமல் துறையூர் உயர்நிலைத் தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து படித்தேன்; வகுப்பையும் கடந்தேன். இப்போது சிறிது விவரம் அறிந்த பருவம். இந்தக் கோடை விடுமுறையில் பழைய பாளையத்திலிருந்து (நாமக்கல் அருகிலுள்ள ஒரு சிற்றுார்) ஒரு பெரியவரி