பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 நினைவுக் குமிழிகள்-1 (எனக்குத் தாத்தா முறையிலிருந்தவர்) கோட்டத்துரர் வந்தார். ஒரு சில நாள் தங்கியிருந்தார். அவர் சொன்னார்: ‘'நீ சிறு பையன். நின் தாய்வழி உறவு நன்றாக இல்லை; அறுந்தே போய்விட்ட நிலை, நின் தந்தைவழி உறவும் அறுந்த நிலையில்தான் உள்ளது. நின் தந்தை அற்பாயுளில் மறைந்ததால் (27-அகவை) இந்நிலை ஏற்பட்டது. உன் உறவினர்கள் நாமக்கல் வட்டத்தில் பவுத்திரம், நாவலடிப் பட்டி, பழையபாளையம், முத்துக்காப்பட்டி, பொட்டணம் ஆகிய இடங்களில் உள்ளனர். அவர்களையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் {3} | fr = உனக்கும் விடுமுறையாதலால் என்னுடன் வரலாம்” என்று சொல்லிக் கூட்டிக் கொண்டு சென்றார். முதலில் பழையபாளையம் சென்றேன். பேருந்து வசதி இருந்தது. கோட்டத்துளரிலிருந்து துறையூர் வரை (7-கல் தொலைவு) நடராஜாசர்வீஸ்தான். துறையூரிலிருந்து நாமக்கல் செல்லும் பேருந்தில் ஏறி பிரிவுரோடு என்னும் இடத்தில் இறங்கினோம். இரண்டுகல் தொலைவு போடி நாய்க்கன்பட்டி வழியாக நடந்து பழையபாளையத்தை அடைந்தோம். இரண்டு நாட்கள் அங்குத் தங்கினேன். அங்குத் தாத்தாவின் மகன் (எனக்கு மாமன்முறை), மகள் (சிற்றன்னை முறை) இவர்களையெல்லாம் அறிமுகம் செய்து வைத்தார். இக்குடும்பங்களிளெல்லாம் ஏழ்மை தவழ்ந்த நிலை. இரண்டு நாட்களுக்குப் பிறகு நான்கு கல் தொலைவிலுள்ள முத்துக்காப்பட்டிக்கு இட்டுச் சென்றார்; நடராஜா சர்வீஸ்தான்! அங்கு இராமசாமி ரெட்டியார் வீட்டிற்கு இட்டுச் சென்றார். (இவர் பொட்டணத்திலிருந்து வந்தவராதலால் பொட்டணம் இராமசாமி ரெட்டியார் என்று வழங்கப்பட்டவர்). இவர் எனக்குப் பெரியப்பா முறை. பொட்டணத்தில் உள்ள முன்று பாட்டிமார்களில் முதல் பாட்டியின் முதல் மகள்; இரண்டாவது மகன் சிலுவம்