பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பழைய நிகழ்ச்சி 343 பட்டியில் (நாமக்கல் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்) திருமணம் செய்து கொண்டு மகப்பேறு இன்றி பொட்டணத் தில் வாழ்ந்தார். அவர் தம் தமையன் இராமசாமி ரெட்டியாரின் முதல்தாரத்தின் மகன் ந ல் ல ப் ப ரெட்டியாரைத் தத்து எடுத்துக் கொண்டு பொட்டணத்தில் தங்கியிருந்தார். ஊர் மணியம் அவரிடம் இருந்தது. பொட்டணம் இராமசாமி ரெட்டியார் முதல் மனைவி இறக்கவே, முத்துக்காப்பட்டியில் இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணை மணந்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தார். நல்ல வசதியுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று ஆண் களும் ஒரு பெண்ணுமாக மக்கட் செல்வத்தையுடையவர். நால்வரில் எனக்கு மூத்தவர் ஒருவர்; ஏனைய மூவரும் எனக்கு இளையவர்கள். இங்குத்தான் ஒரு வாரம் தங்கி விட்டேன். தாத்தா என்னை இங்கு விட்டுவிட்டு ஒரு வாரத்தில் வருவதாகத் தம்மூர் சென்று விட்டார். இங்கும் இவர் தம் மக்களைக் கல்வியறிவில்லாமல் செய்துவிட்டார். எல்லோரும் உள்ளுரில் ஐந்து வகுப்புகளை முடித்துக் கொண்டவர்கள். இவர்கள் யாவரும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தமையால் பொழுதுபோவதே தெரியவில்லை. காலையிலும் மாலை யிலும் வயலுக்கு இட்டுச் செல்வார்கள். அருகிலுள்ள மிட்டாதாருக்குச் சொந்தமான நிலங்களைக் காட்டுவார்கள். அவை நல்ல வளத்துடன் திகழ்ந்ததைக் கண்டேன், கொல்லிமலை அடிவாரமாதலால் முல்லையும் குறிஞ்சியும் இணைந்து வளத்துடன் திகழ்ந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். பொட்டணம் இராமசாமி ரெட்டியார் என்மீது அளவற்ற அன்பு காட்டினார். காரணம், நான் அவரது சிற்றன்னையின் பேரன்; அதாவது மூன்றாவது பாட்டியின் மகன்; ஞானி நல்லப்ப ரெட்டியாரின் (என் தந்தை) மகன்,