பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 நினைவுக் குமிழிகள்-1 என் தந்தை அற்பாயுளில் இறந்துவிட்டமையை நினைத் து தம் மக்களிடம் காட்டிய பற்றையும் பாசத்தையும் விட அதிகமாகவே அவற்றை என்னிடம் காட்டினார். இவர் இரவெல்லாம் இருமிக் கொண்டிருப்பார்; இஃது ஒருவித தீராத இளைப்புநோயாக இவரிடம் பற்றிக்கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்குக் கூட பனைவெல்லம் காஃபி அருந்துவார். தூங்கிக் கொண்டிருக்கும் என்னை எழுப்பி எனக்கும் ஒரு கப் தருவார். மறுத்தாலும், வற்புறுத்தி அருந்தச் செய்வார். "தந்தையை மிகச் சிறு வயதிலேயே இழந்தும், உற்சாகமாகப் படித்து வருகிறாய். இன்னும் எவ்வளவோ கல்வி உனக்கு வரவேண்டியிருப்பதை நான் கற்பயிைல் காண்கின்றேன்” என்று சொல்லி ஆனந்தக் கண்ணிர் விடுவார். அப்போதெல்லாம் என் தந்தையின் நினைவு வரும்; அவர் பார்த்துப் பரிவுடனும் பாசத்துடனும் பழக முடியாமல் மறைந்தவர்; இவரோ அவற்றையெல்லாம் எனக்குக் காட்டி மகிழ்பவர்; என்னையும் மகிழச் செய்பவர். முத்துக்காப்பட்டியில் நான் தங்கியிருஆத காலத்தில் இரண்டு கல் தொலைவிலுள்ள சேந்தமங்கலம் என்ற ஊரில் அவதூது சுவாமிகளால் நிறுவப்பெற்ற தத்தாத்ரேயர் திருக்கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நடைபெற்றது. என் உடன் பிறவா ச் சகோதரர்களுடன் விழாவைக் கண்டு களித்தேன். அப்போது பொட்டணம் இராமசாமி ரெட்டியாரும் (பின்னால் எனக்கு மைத்துனராக வேண்டி யவர்) தன் மனைவி இராசாம்பாளுடனும் தங்கை செல்ல பாப்பாவுடனும் விழாவுக்கு வந்திருந்தார். நானும் செல்லப்பாப்பாவும் கணவனும் மனைவியுமாவோம் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. என் மைத்துனரும் கூடக் கருதியிருக்க மாட்டார். முத்துக்காப்பட்டியிலுள்ள என் பெரியப்பா குடும்பத்தின் சிந்தையிலும் இஃது இடம் பெற்றிருக்கமுடியாது. திருவிழா முடிந்ததும் முத்துக்காப்பட்டி