பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பிறந்த சிற்றுார் 7 இருந்தது. இவர்கள் நிலச்சுவான்தார்களை அண்டிப் பிழைப்பவர்கள். ஒற்றுமை மிக்கவர்கள். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இவர்கள் மேற்கொள்ளும் முயல் வேட்டை'த் திருவிழா கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆட்டமும் பாட்டமும், சிலம்பு விளையாட்டும் கத்தி சுழற்றும் விளையாட்டும் பார்ப்போர் கண்சளுக்கு நல்ல விருந்து. ஆண்டுதோறும் ஆடிப் பதினெட்டுக்கு முதல் நாள் நான்கு கரகங்கள் காவிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நீராட்டி மறுநாள் திருப்பிக் கொணரப்படும். பாட்டுப் பாடிக்கொண்டு கரகஆட்டம் ஆடுவது இன்று பார்ப்பதுபோல் என் மனத்தில் பசுமையாக உள்ளது. பெரிய பூசாரி ரெட்டி யார் ஆடுவது மிக அற்புதமாக இருக்கும். இப்போதெல்லாம் இத்தகைய காட்சிகளைக் காண்பது அரிதாகி விட்டது. விழா முடிந்ததும் கரகங்கள் கோயில் வீடு' என்ற இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பெறும். ஊருக்குத் தெற்கே 'நல்ல தண்ணிக்குளம்' என்ற ஒரு நீர் நிலையுண்டு. மழை நீர் தேங்கும் குளம். நீரின் சுவை அற்புதமானது. ஊர் மக்கள் ஒன்றிரண்டு குடங்கள் இந் நீரை எடுத்துச் சென்று குடிநீராகப் பயன்படுத்து கின்றனர். இன்றும் இந்த நிலையைக் காணலாம். குளத்திற்குக் காவல் உண்டு. இ ல் லா வி ட் டா லு ம் அக்காலத்து மக்கள் கட்டுப் பாட்டுடன் நீர் கெடாமல், பாதுகாத்தனர். இன்னும் ஊருக்குத் தென்புறத்தில், ஊருக்கு மிக அருகில், பூங்கேணி என்ற நீர்நிலை உண்டு. இது தனியாருக்குச் சொந்தமானது, இதன் நீர் வயலுக்குப் பாய்ச்சப் பயன் படு கின்றது. எனினும் இந் நீர் நிலை ஊருக்கு மிக அருகிலிருப் பதாலும், நீர் பளிங்கு போல் தெளிவாக இருப்பதாலும் மக்கள் இதனை நீராடுவதற்குப் பெரிதாகப் பயன்படுத் து கின்றனர்,