பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

நினைவுக் குமிழிகள்-I

இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க சிற்றுாரில் 'பண்ணையார் வீடு' என்று வழங்கும் ஒரு நடுத்தரக் குடும்பம் உண்டு. இதுதான் என் அன்னையாரின் தாயகம். அன்னையாரின் திருநாமம் காமாட்சி அம்மாள். இந்த ஊருக்கு மேற்கில் சுமார் ஆறுகல் தொலைவிலுள்ள கோட்டாத்தூர் என்ற சிற்றூர் என் தந்தையார் பிறந்த ஊர். இவர் திருநாமம் நல்லப்ப செட்டியார் என்பது. இந்த ஊரில் 'ஞானியார்' பரம்பரை என்ற பரம்பரை ஒன்று உண்டு. அந்த பரம்பரையைச் சேர்ந்தவர் என் தந்தையார், என் பிராரத்த கருமத்தால் (நுகர்வினையால்) நான் பெரகம்பியில் என் அன்னையார் பிறந்த இல்லத்தில் 27.8.1916-இல் பிறந்தேன். கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே பற்றா வந்து அடியேன் பிறந்தேன்". என்ற திருமங்கையாழ்வாரின் திருமொழியை அப்போது சிந்தித்து அறிய அகவை இல்லையாயினும் இப்போது (72-அகவையில்) நினைந்து அசைபோட முடிகின்றது. சில ஆண்டுகள் பாட்டியார் வீட்டில் வளர்ந்தேன்; சில ஆண்டுகள் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் கல்விகற்றேன். இவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்ல மெல்லப் போயினவே”. பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தன்-வர லாறுகளும் வரலாற்றில் தனிப்பட்டோரின் வாழ்க்கையைப் பற்றியனவாக அமையும். தகுதியுடைய வாழ்க்கையாக இருந்தால், அது நுணுக்கமாகவும் உண்மையாகவும் எழுதப் பெறும் தகுதியைப் பெறுகின்றது என்பது லாங்க்ஃபெலோ என்பாரின் கருத்து. தம்முடைய விடாமுயற்சியால் பயனுள்ள 1. பெரி. திரு. 8.9.8