பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் வளர்ந்த சூழ்நிலை 9 முறையில் பெரும் புகழ் எய்திய நல்லவர்கள்-வல்லவர்களின் வரலாறு, தன்-வரலாறுகள் படிப்போரிடம் அகத்தெழுச்சியை எழுப்ப வல்லவை; அவை அவசியம் படிக்கவேண்டியவை என்றார் மற்றோர் அறிஞர். இவை உலகளாவிய முறையில் பயனுள்ள மகிழ்வூட்டத்தக்க படிப்பாக அமைகின்றன: படிப்பினையாகவும் அமைகின்றன. இந்த எளியேனின் வாழ்க்கை படிப்போருக்கு ஏதாவது பயன் நல்குமானால், அவர்களிடம் அகத்தெழுச்சியை எழுப்பக் கூடுமானால், அது நான் பெற்றபேறு; இறைவனின் திருவுள்ளமுமாகும். குமிழி-2 2. நான் வளர்ந்த சூழ்நிலை எனக்கு மூன்றாண்டுப் பருவம் நிரம்பும் முன்னர், என் தந்தையார் முப்பது அகவை எட்டும் முன்னர் இறைவன் திருவடி நிழலை அடைந்து விட்டார். என் தந்தையார் நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருக்கும்போது அவர் விருப்பப்படி அவரருகில் என் தாயார் என்னைப் படுக்க வைத்ததும் என் தந்தையார் என்னை அணைந்த வண்ணம் படுத்திருந்ததும் கனவு கண்டதுபோல் நினைவிலுள்ளது. என் அன்னையார் நிலபுலன்களைப் பார்த்துக் கொண்டு மூன்று வயதுகூட நிரம்பாத என்னை நன்கு பராமரிப்பது சிரமமாக இருந்ததால் என்னைப் பெரகம்பியில் என்பாட்டி வீட்டில், அதாவது தான் பிறந்த இல்லத்தில், விட்டு வைத்தார்கள். அங்கு மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டேன். இதற்குக் காரணங்கள் உண்டு. என் தாய்மாமன் பண்ணை நல்லப்ப ரெட்டியார் கிட்டத்தட்ட என் தந்தையாரின் வயதையொத்தவர். இவருக்குப் பெரகம்பியிலேயே ஒரு பெண்ணைத் தேர்ந் தெடுத்துத் திருமணமாயிற்று. ஏதோ ஒன்றிரண்டு ஆண்டு கள் கூட இல்லற வாழ்க்கை இனிதாக நடைபெறவில்லை.