பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நினைவுக் குமிழிகள் தான் அப்பொழுது இதையெல்லாம் அளந்து பார்க்கும் அளவுக்கு வயதை எட்டாத சிறுவன். ஒன்று மட்டும் நன்றாக நினைத்துப் பார்க்க முடிகின்றது. என் மாமனின் வாழ்க்கைத் துணைவியார் பெரகம்பியிலிருந்ததால், சில சமயம் அவர்களைப் பார்க்க வாய்ப்புகள் ஏற்பட்டன. என் தாய் மாமன் மகா சாது. மடத்தில் சாதுக்கள் குழுவில் இருக்க வேண்டியவர் ஏதோ வீட்டில் இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். என் தாய் வீட்டுப் பாட்டனை நான் பார்த்ததில்லை. நான் பிறப்பதற்கு முன்னர் காலகதியை அடைந்துவிட்டார் போலும். என் பாட்டியார் சற்றுக் கடுமையானவர். அவர் போட்ட கோட்டை யாரும் தாண்டக் கூடாது. இல்லத்தரசியாக விளங்கினார்கள். வேளாண்மை அவர்கள் ஆணைப்படிதான் நடைபெற்றது. என் தாய்மாமனுக்கு வாழ்க்கைப்பட்ட அம்மையாரும் சற்றுக் கடுமையானவர்கள். அவர்களின் சிரித்த முகத்தை ஒருநாளும் நான் பார்த்ததில்லை. என்னைவிட ஒன்றிரண்டு வயது குறைந்த ஒரு பெண் மகவுடன் உள்ளுரில் தம் தாய் வீட்டில் இருந்து வந்தார்கள். என் தாய் மாமன் பண்புக்கும் இவர்தம் பண்புக்கும் சிறிதுகூடப் பொருத்தமில்லை என்பது ஐந்து வயதுகூட நிரம்பப் பெறாத என் கணிப்பு. என் மாமனைப் பொம்மைபோல் ஆட்ட முயன்றிருக்க வேண்டும். ஆனால் அந்த அம்மையாரைவிட இன்னும் சற்றுக் கடுமை யான என் பாட்டியார் செல்லாயம்மாள் முன் அவர்கள் செக் (cheque) எங்ங்ணம் செல்லும்? பருப்பு எப்படி வேகும்? உலகெங்கும் பொதுவாகக் காணப்படும் மாமியார்-மருமகள் போராட்டத்தை மிகச் சிறிய வயதில் நான் வளர்ந்த வீட்டிலேயே காண நேரிட்டது. இந்தப் போராட்டத்தில் மாமியார் கை ஓங்கி நின்றதால் மருமகள் தன் ஒரு வயதுப் பெண் மகவுடன் தன் தாய் வீடு செல்ல வேண்டியதாயிற்று