பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் வளர்ந்த சூழ்நிலை I1 சுமார் நான்கைந்து ஆண்டுகள் என் தாய் மாமனுக்கு மனைவியைப் பிரிந்த நிலை. இந்தக் காலத்தில் மூன்று வயதுப் பேத்தியை(பெயர் செல்ல பாப்பா)(அப்போது எனக்கு வயது ஐந்து) தம் வீட்டிற்குத் தருவித்துக் கொஞ்சுவார்கள் என் பாட்டியார். என்னையும் தம் பேத்தியையும் சேர அமர்த்திப் பொம்மைக் கல்யாணம் செய்து மகிழ்வார்கள். செல்ல பாப்பாவைக் கண் போன்ற செல்லப் பேரனுக்குக் கட்டி வைத்துவிட வேண்டும் என்று கனவு கண்டார்கள் போலும்! தம் மருமகளைப் பொம்மையாக ஆட்டி வைக்கலாம் என்று நினைத்த உள்ளம் தோல்வியடைந்ததால் சிறு பிள்ளைகளாகிய எங்களை அம்மாதிரி ஆட்டிவைத்து அந்த உள்ளம் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. மனித உள்ளம் கட்டும் மனக்கோட்டை களை யார்தான் அளந்து காட்ட முடியும்? உளவியல் வல்லுநர்கள் கூட இங்ங்ணம் அளப்பதில் இன்னும் குழம்பிய நிலையில்தான் உள்ளனர். இந்நிலையில் தந்தையை இழந்தவன் எ ன் ற காரணத்தால் எல்லோர் இரக்கமும் என்பால் வழிந்தது. அக்கம் பக்கத்தார்கூட என்மீது கழிவிரக்கம் காட்டலாயினர். தன் ஒரே பெண் குழவி தன் வீட்டில் வளர வாய்ப்பில்லாத காரணத்தால் என் தாய்மாமனின் முழுக் கவனமும் பரிவும் என்பால் கவிழ்ந்தன. தவிர, என் தாய்மாமனும் என் தாயை மருந்தனைய தங்கை"யாகக் கருதியிருந்தமையாலும், அவர்கள் இளமையிலேயே கைம்பெண் நிலையை அடைந்தமையாலும் அவர்கள்மீது கொண்டிருந்த இரக்கமும் பரிவும் இயல்பாகவே என்மீது கவிழ்ந்தன. நான் பண்ணையார் வீட்டுப் பண்ணைச் செல்வமாக’க் கருதப் பெற்று வளர்க்கப் பெற்றேன். பண்ணைச் செல்வத்தின் பயன் எல்லாம் இந்தப் பண்ணைச் செல்வத்திற்குத்தான்’ என்று வீட்டார் யாவரும் நினைப்பது போன்ற பிரமை என்