பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் வளர்ந்த சூழ்நிலை 13 சொந்தமாகவே இருந்தன. ஆண்டுதோறும் பங்குனி-சித்திரை யில் வெல்லம், நாட்டுச் சருக்கரை உற்பத்தியின்பொழுது ஆலைக் கூடத்தில் ஆலைப்பொறி பூட்டப்பெறும். வேலை முடிந்தவுடன் அவை கழற்றப் பெற்று பாதுகாப்பிற்காக வீட்டிற்கு எடுத்து வரப்பெறும். சுமார் பத்து ஏக்கர் பகுதியில் புன்செய்ப் பயிர்ச் சாகுபடி இருக்கும். சோளம், கம்பு, மொச்சை, பாசிப்பயறு, காராமணி (தட்டைப் பயறு). துவரையாகிய முல்லை நிலக் கருப் பொருள்கள் நல்ல விளைச்சல்களை நல்கும், இவற்றுள் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தில் சிலசமயம் மிளகாய் சாகுபடி யாகி நல்ல விளைச்சலை நல்கும். இந்தப் பகுதியில் சற்று ஆழத்தில் ஒரு கிணறு உண்டு. அதனை 'வாணிக்கிணறு: என்று வழங்குவர். மாரிக்காலத்தில் கிணறு நிரம்பி வழிந்து நீர் பெருகி கபிலை ஏற்றச் சாலைக்குமேல் ஐந்து அல்லது ஆறு அடிவரை உயர்ந்திருக்கும். இந்தக் காலத்தில் நீர் இறைப்பு இல்லை. ஒரு மதகு அமைப்பு வழியாக நீர் கட்டுப்படுத்தப் பெற்று பாசன வசதி செய்யப்பெறும். எஞ்சிய இருபது ஏக்கர் நிலத்தில் நெல், கேழ்வரகு, கம்பு, மிளகாய், கரும்புப் பயிர்கள் சாகுபடி செய்யப்பெறும். இவை மருத கிலச் சூழ்நிலையை மாண்புறுத்திக் காட்டும். அக்காலத்தில் இவை நல்ல விளைச்சலை நல்கியதால் பண்ணையார் வீடு மிகச் செழிப்பாகத் திகழ்ந்தது. விலை வாசி நிலை மிகக் குறைவாக இருந்ததால் பண்டங்கள் பெருகிக் கிடந்தனவேயன்றி பணம் பெருக்கம் இல்லை; பணப் புழக்கமும் குறைவாகவே இருந்தது. வாணிக் கிணற்றிலிருந்து ஒரு கரையோரமாக மருத நிலப் பகுதிக்கு வருங்கால் மூங்கில் புதர்கள் வரிசை வரிசையாகக் காணப் பெறும். இவை குறிஞ்சி கிலச் சாயலை நினைவூட்டும், நெய்தல் நிலத்திற்கு இங்கு இ -மே இல்லை. மருதநிலப்