பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நினைவுக் குமிழிகள்-1 பகுதியிலும் ஒர் இறைகிணறு நன்கு பயன்பட்டது. இந்த நிலப்பகுதியில் சுமார் வேலியால் சூழப்பெற்ற முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாமரங்கள் இருந்தன. இரண்டு மரங்களின் கனிகள் மிகச் சுவையுடையனவாயினும், வடக்குப் பகுதியிலுள்ள மரத்தின் கனிகள் அதிமதுர {ᏰfrᎶöI GüᎠ ᎧᏂ! . சுமார் நான்கு கல் தொலைவிலுள்ள பச்சை மலைத் தொடர்களில் அ-தழை என்ற ஒருவகைத் தழை உண்டு; கறிவேப்பிலை மணம் கொண்டது. நல்ல தழை உரமாகப் பயன்படுவது. சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் இத்தழையை தழை-உரமாகப் பயன்படுத்தி வீட்டுச் செலவுக்கு வேண்டிய சம்பா நெல் பயிரிடுவர். இந்த நெல் அரிசிச் சோறு சுவை யுடையதாகவும் நறுமணம் உடையதாகவும் சற்று எண்ணெய்ப் பசையுடையதாகவும் இருக்கும். இந்தப் பண்ணையாருக்கு ஏரிப் பாசன வசதியுடன் நிலம் இல்லை. இவருக்குரிய நிலத்தில் கடுமையான உழைப்பால் சாகுபடி நடைபெற வேண்டியதாய் இருந்தது. பண்ணை வேலையை என் அம்மான் ஒருவரே சில பணியாட்களின் துணை கொண்டு கவனித்து வந்தார். இவரும் நல்ல உழைப்பாளி கரும்பாலை வேலையில் என் தாய்மாமன் ஒருவரே நேராக ஈடுபடுவார். கரும்புப் பாலைக் காய்ச்சிப் பாகாக்கி நல்ல பதத்தில் இறக்கி அச்சுக் குழியில் இறக்கிச் சிறுசிறு அச்சு களாலான வெல்லம் தயாரிக்கப்பெறும். இப்பணியில், தொட்டியிலுள்ள பாகு அச்சாக்கப்பெறும்போது, கால தாமதம் ஏற்படும். அப்போது தொட்டியிலுள்ள பாகின் இறுதிப் பகுதியில் ஆடை கட்டும். அந்த ஆடையை பிரித்து எடுத்து ஆடை வெல்லமாகத் தருவார் என் அம்மான். ஒரு தந்தை காட்டும் பரிவையும் அன்பையும் விட அதிகமாகவே என்மீது காட்டுவார் இந்தப் பெருந்தகை. வீட்டுச்