பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் வளர்ந்த சூழ்நிலை 15 செலவுக்கும் பிறவற்றிற்கும் சுமார் மூன்று கொப்பரை வெல்லம் தேவைப்படும். இதற்குரிய கரும்புப்பால் ரஸ்தாளி என்ற வகைக் கரும்பினின்று நன்கு வடிகட்டப்பெற்று அதில் ஏலம், கிராம்பு, ஜாதிக்காய் இவற்றின் பொடியைக் கலந்து வெல்லம் தயாரிக்கப்பெறும், வெல்லம் காய்ச்சும் ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் நான் பள்ளிக் கூடத்திற்கு மட்டம்’ போட்டுவிடுவேன். ஆயினும் ஒன்றிரண்டு நாட்கள் என் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரை இட்டுவந்து கரும்புப்பால் விருந்து வைப்பேன்; அவர் இல்லத்தில் பிறருக்கு வேண்டிய அளவு கரும்புப்பாலை அனுப்பிவைப்பேன். தவிர, சுமார் இன்றைய அளவில் நான்கு கிலோவுக்குக் குறையாத அளவுக்கு அச்சு வெல்லத்தையும் கரும்புத் தோகையால் அழகான பார்சலாகக் கட்டி அனுப்புவேன். ஆசிரியர் அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பும்போது என் தலையிலும், முதுகிலும் தட்டிக்கொடுத்து கன்னத்திலும் கிள்ளி விட்டுச் செல் வார். இனி, என் தாய்மாமன் வீட்டு நிலையைப் பற்றிச் சில சொற்கள். நல்ல மச்சு வீடு, பின்பகுதி நன்கு பூசப்பெற்று குடியிருப்புக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. முன்பகுதி மாடிப் பகுதியையுடையது. இது ஒரு நெற்களஞ்சியம் என்றே சொல்லலாம். கீழே ஈரம் தட்டாமலிருக்கும் பொருட்டு சுமார் மூன்றடி உயரத்திற்கு மேல்தான் இக் களஞ்சிய அமைப்பு இருக்கும். இந்தப் பகுதியில் ஆலைக் குரிய சாமான்களும் பிறவும் அடைக்கலம் பெற்றுப் பாது காப்பாக இருக்கும். மேலிருந்து களஞ்சியப் பகுதிகளில் (நான்கு பகுதிகள்) நால்வகை நெல் கொட்டப்பெறும். கீழிருந்து நெல் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளப் பெறும். மேல்மாடி அறையாகப் பயன்படுத்தப் பெறும்; அது தங்குவதற்காக அன்று; சாமான்களைப் போடுவதற்காகத் தான். தானியங்கள், வெல்லம், பயறு வகையறாக்கள்